பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய பெண் உள்பட 3 பேர் கைது
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (வயது 38) என்பவர் எட்டையாபுரம் காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று பாரத் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் இருந்ததால், பின்னால் இருந்தவரை ஆசிரியர் பாரத் அந்த மாணவனை முன்னால் வந்து உட்காரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர் முன்னால் வரும் போது தவறி கீழே விழுந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து அந்த மாணவனின் பாட்டி கீழநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (53) என்பவரது மனைவி மாரிசெல்வி , ஆசிரியர் பாரத்தை சத்தம் போட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று ) மதியம் ஆசிரியர் பாரத் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த மேற்படி 2ம் வகுப்பு மாணவனின் பெற்றோரானா ஓட்டப்பிடாரம் தெற்கு கல்மேடு பகுதியைச் சேர்ந்த தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் மாணவனின் தந்தை சிவலிங்கம் (34), சிவலிங்கம் மனைவி செல்வி (28) மற்றும் மாணவனின் தாத்தா முனியசாமி (53), முனியசாமியின் மனைவி மாரிச்செல்வி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் பாரத்தை தவறாக பேசி பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியரை ஓட ஓட விரட்டி கை மற்றும் கம்பால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் பாரத் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். ஜெயச்சந்திரனிடம் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியரை தாக்கிய வர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் முனியசாமி ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.