கோவில்பட்டியில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்; எச்.ராஜா பங்கேற்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பா.ஜனதா சார்பாக நேற்று மாலை கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் அருகில் வாஜ்பாய் திடலில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக தேசிய செயற்குழு உறுப்பினர் மூத்த தலைவர் எச் ராஜா சிறப்புரையாற்றினார் . அவர் பேசுகையில் கூறியதாவது:-
முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி, கட்சி , குடும்பத்தில், கட்டுப்படவில்லை,திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம்,தமிழக மக்களுக்கு ஒரு பாரமாக இருக்கிறது திமுக என்றும்,புதுவையில் தமிழ் பேராசிரியருக்கு 40 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதுதான் தமிழகத்தில் தமிழ் வளர்க்கும் நிலை. நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.சில பொறுக்கி பசங்க என்னை பிகாரி என்று கூறுகின்றனர்.தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.பட்ஜெட் உரையின் போது படித்தது தமிழா ? என் தாய் தமிழ் அன்னை அழுது விடுவாள். திமுக என்பது தமிழை அழிக்க வந்த ஒரு அமைப்பு /
,தி.க. . திமுக இரண்டும் தமிழ் விரோதி, தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாருக்கு சிலை வைத்தால் இவர்களும் தமிழ் விரோதிகள் தான்.மத்திய அரசின் வெற்றிக்கு காரணம் ஒவ்வொன்றிலும் மக்களின் பங்களிப்பு உள்ளது. இதனால் மக்கள் ஏற்று இருக்கிறார்கள்,10 கோடி குடும்பங்களுக்கு நாடு முழுவதும் பிரதமர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு ஒன்றுபட்ட இந்தியாவில் இருக்கிறது.
காவிரிக்கு நதிநீர் ஆணையம் அமைத்து கொடுத்தது பிரதமர் மோடி தான்,2024ல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 30 இடங்களை வெல்ல வேண்டும்.
இவ்வாறு எச்.ராஜா பேசினார்.
மாவட்ட பா..ஜனதா பொதுச் செயலாளர்கள் வேல் ராஜா கிஷோர் கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி, நகர தலைவர் சீனிவாசன் மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணன், மாநில அரசு தொடர்பு செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கணேசன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து உள்பட பலர் கூட்டத்தில் கல்ந்து கொண்டனர்.’
பொதுக்கூட்டத்தில் எச்.ராசா பேச்சை கேட்க 500க்கும் மேற்பட்டோர் கூடி இருந்தனர்,