• November 14, 2024

இலவச திட்டங்களால் தான் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது; எச் ராஜா சொல்கிறார்

 இலவச திட்டங்களால் தான் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது; எச் ராஜா சொல்கிறார்

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது எச்.ராஜா  கூறியதாவது:-

 தி.மு.க. என்றாலே வன்முறை கட்சி என்று அனைவருக்கும் தெரியும். தற்போது அவர்களுக்குள்ளேயே வன்முறை கலாச்சாரத்தை கையாளுகின்றனர். திருச்சி சிவாவால் அவரது வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. நேருவின் தம்பிக்கு நடந்தது போல் சிவாவுக்கும் நடக்குமோ என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் ஒரு பா.ஜ.க.காரர் கூட உயிரோடு இருக்க முடியாது என்று பேசிய ஆர்.எஸ்.பாரதியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

தி.மு.க.வுக்காக உழைத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை அந்த கட்சி நிறை வேற்றவில்லை. அதேபோல் மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.7ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 60 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மட்டும் கொடுக்கலாம். இதுவரை அதற்கான தகுதி என்ன? என்பது குறித்தும் அறிவிக்க வில்லை. இது மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட். இலவச திட்டங்களால் தான் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது.

பா.ஜ.க.வில் ஒரு நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் மாநில ஒழுங்கு கட்டுப்பாட்டு குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அண்ணாமலை துடிப்புடன் செயல்படுகிறார் தேர்தல்களில் உள்ள ஊழல்களை களைய வேண்டும். அதற்காக அண்ணாமலை சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாக சில கருத்துக்கள் வெளியே வந்தன. அதற்கும் அவர் தெளிவாக பதில் அளித்துள்ளார். கூட்டணி முடிவு குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அண்ணாமலை இளமையான தலைவர். அவர் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், முன்னாள் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நகர தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *