உலக தண்ணீர் தினம்: கோவில்பட்டியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
நாடு முழுவதும் மார்ச் 22 ம்தேதி தண்ணீரின் அவசியம் ,நீரினை சேமிக்கும் முறை, தண்ணீர் சிக்கனம் குறித்தும் விழிப்புணர் ஏற்படுத்தும வகையில் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டி இன்று கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி நகராட்சி ஆகியவை சார்பில் உலகதண்ணீர்தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
கோவில்பட்டி நாடார் நடுநிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி மாணவர்கள் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஓவியம் வரைந்து கண்காட்சியில் மாணவர்களின் பார்வைக்கு வைத்திருந்தனர்.
பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின கருத்தரங்கிற்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியை சாந்தினி அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி நகராட்சி உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன்,சுகாதார ஆய்வாளர் காஜா நஜிமுதீன் ஆகியோர் கலந்து கொண்டு உலக தண்ணீர் தின விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.
பள்ளி மாணவிகள் இந்திரா,சுபத்ரா,அட்சயா ஆகியோர் உலக தண்ணீர் தினம் குறித்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ராமச்சந்திரன், கணேசன், மகாதேவி, ஜோதி, விஜய பொன் ராணி, பாரதி செல்வின். உள்ளிட்ட ஸ்வச் பாரத் பரப்புரையாளர்கள்,பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் அருள் காந்த்ராஜ் நன்றி கூறினார்.