• May 20, 2024

Month: November 2022

தூத்துக்குடி

இரை தேடி ஊருக்குள் வந்த மானை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது கழுத்தில் சுருக்கு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் நேற்று இரவு மிளா என்ற அரிய வகை மான் காட்டுப்பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்கு வந்து விட்டது. இதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர், இதை தொடர்ந்து போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.தப்பி ஓட வழியின்றி மிரண்டு போய் நின்ற மானை பிடிப்பதற்கு வனத்துறை ஊழியர்கள் முயன்றனர். மாடி கட்டிடத்தில் நின்றபடி நீலாமான சுருக்கு கயிறை போட்டு பிடித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த மான் சுருக்கு கயிறில் […]

தூத்துக்குடி

`சிந்து வெளி நாகரிகம் விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’-

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவின் 6-வது நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிந்துவெளி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ‘போ் இசை கொற்கை’ என்ற தலைப்பில் பேசுகையில் கூறியதாவது:-போ் இசை கொற்கை என்பது, மிகவும் புகழ் பெற்ற கொற்கை என பொருள் ஆகும். சங்க இலக்கியத்தில், முத்து, வலம்புரி சங்கு ஆகியவற்றிற்கு புகழ் பெற்ற கொற்கை துறைமுகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகமாக விளங்கியது என்பதற்கு, அகழாய்வில் கிடைத்த […]

செய்திகள்

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு; 295 இடங்களில் 2.99 லட்சம் பேர் எழுதினர்

தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டர்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர். இதற்காக 3 லட்சத்து, 66 ஆயிரத்து, 727 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இவர்களில் ஆண்கள் 2 லட்சத்து 99 ஆயிரத்து 857 பேரும், பெண்கள் 66 ஆயிரத்து 811 பேரும் உள்ளனர். சென்னையில் 16 ஆயிரத்து 178 பேர் விண்ணப்ப மனுக்களை கொடுத்திருந்தனர். இவர்களில் ஆண்கள் […]

செய்திகள்

டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஞ்சலி ;

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- மக்கள் மனதில் மறையாத,நீக்கமற நிறைந்திருக்கின்ற இன்னும் சொல்லப்போனால் இந்த உலகம் உள்ள அளவு,உலகம் இருக்கின்றவரை ஜெயலலிதாவின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரின் திட்டங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் நினைத்துக்கொண்டே இருக்கின்ற வகையில் மிகப்பெரிய தலைவராக,மிகப்பெரிய அளவுக்குத் தமிழகத்தை வழிநடத்தியவராக,முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு வருகிற 5 ம் தேதி அவரின் நினைவுநாள்.அந்த நினைவுநாளில் கழக தொண்டர்கள் நம்முடைய கழகத்தின் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே நான்கு வழி சாலை; தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்

தூத்துக்குடியில் இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குனர் ஒய். ஏ. ராவுத் பேசுகையில்கூறியதாவது:-தூத்துக்குடி துறைமுகம் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.தூத்துக்குடி-மதுரை சாலையில் ஸ்டெர்லைட் அருகே உள்ள ரெயில்வே […]

செய்திகள்

பெண் வீசிய செருப்பை இரை என நினைத்து கவ்விச்சென்ற பாம்பு; வைரலாகும் வீடியோ

ஒரு வீட்டின் முன்பு ஊர்ந்து சென்ற பாம்பை பார்த்து பயந்துபோன பெண் அதை விரட்டுவதற்காக செருப்பை வீசுகிறார். அதை இரைஎன நினைத்து அந்த பாம்பு செருப்பை கவ்வி செல்கிறது.இதுபற்றி, இந்திய வன துறை அதிகாரியாக உள்ள பர்வீன் கஸ்வான் வெளியிட்டு உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாம்பை விரட்ட பெண் செருப்பை வீசியதும், டக்கென்று பாம்பு அதனை வாயில் கவ்வி கொள்கிறது. இரையென நினைத்து சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்ற பாம்பை உடன் […]

தூத்துக்குடி

நாளை இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு: தூத்துக்குடி வந்த வினாத்தாள்களுக்கு பலத்த

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படையினருக்காக எழுத்து தேர்வு நாளை (27.11.2022) அறிவித்துள்ளது.மேற்படி தேர்வுக்கான வினாத்தாள்கள் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டன. இந்த பெட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு, அவற்றை பாதுகாப்பாக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாக அறையில் வைக்க ஏற்பாடு செய்தார், மேலும் அந்த அறைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் சீல் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புனித சவேரியார் ஆலய திருவிழா தொடங்கியது

தூத்துக்குடி அருகே உள்ள சவேரியார்புரத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புனித சவேரியாரின் விரல் பாதுகாக்கப்பட்டு பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் 134 வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடியேற்ற திருப்பலி பங்கு தந்தை குழந்தை ராஜன் தலைமையில் நடைபெற்றது.அதனை தொடர்ந்து கொடிபவனி நடைபெற்றது. பின்னர் ஆலயம் எதிரே உள்ள கொடி மரத்தில் மறைவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை பென்சன் தலைமையில் திருகொடியேற்றம் நடைபெற்றது. சவேரியார் உருவம் […]

தூத்துக்குடி

அவ்வையார் விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2023-ம் ஆண்டுக்கான உலக மகளிர் தினவிழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு அவ்வையார் விருது, ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்த விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், […]

கோவில்பட்டி

கண்மாய்க்கு அருகே 36 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கல் கண்டுபிடிப்பு; ஒருவருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன் மற்றும் போலீசார் கோவில்பட்டி பாண்டவர் மங்கலம் கண்மாய்க்கு அருகே உள்ள காலி இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.அங்கு சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை சோதனை செய்த போது, மொத்தம் 45 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகளில் 1620 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது […]