குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த 5 அடி நீள உடும்பு ;பெண்கள் அலறல்

 குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த 5 அடி நீள உடும்பு ;பெண்கள் அலறல்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர்.
இன்று காலை மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டமும் ஓரளவு இருந்தது.
அருவியில் ஆனந்தமாக குளித்து கொண்டிருத்தனர்.அப்போது அருவியின் மேல்புறத்தில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு கீழே விழுத்தது..
தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்தது. இதனால் பயந்துபோன பெண்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அங்கு சென்று பார்த்தபோது உடும்பை கண்டனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி உடும்பை பிடித்தனர். பின்னர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உடும்பை கொண்டு போய் விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடும்பு அகற்றப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் ஒருவித பயத்துடனேயே அருவியில் குளித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *