• May 20, 2024

Month: September 2022

சினிமா

நடிகை பாவனாவுக்கு அமீரக அரசின் `கோல்டன் விசா’

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.தமிழ் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், விஜய்சேதுபதி, நாசர், நடிகைகள் திரிஷா, மீனா, ஆண்ட்ரியா ஆகியோர் ஏற்கனவே கோல்டன் விசா பெற்றுள்ளனர்.இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் நடிகைகள் அமலாபால், காஜல் அகர்வால், ஊர்வசி ரவுடாலா, […]

சினிமா

சிறுநீரகங்கள் செயலிழந்து உயிருக்கு போராடும் போண்டாமணி; சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் பெஞ்சமின் கண்ணீர்

காமெடி நடிகர் போண்டாமணி 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனையடுத்து சில தொலைக்காட்சி தொடர்களிலும், கேம் ஷோக்களிலும் அவர் நடித்து வந்தார்.சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து […]

செய்திகள்

சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-, தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக 1991 – 1996 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்.கடந்த 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் […]

கோவில்பட்டி

நாளை வைகோ பிறந்தநாள்: கோவில்பட்டியில் 8 இடங்களில் ம.தி.மு.க. கொடியேற்று விழா

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு நாளை (22-ந்தேதி) காலை 8:30 மணிக்கு செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் கோவில்பட்டி நகர ம.தி.மு.க. சார்பில் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் ஒரு மணி அளவில் கதிரேசன் மலை முதியோர் காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கொடியேற்றும் இடங்கள்: 1.காந்தி மைதானம் 2.ஸ்டாலின் காலனி 3.பழனி […]

செய்திகள்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

தமிழக முன்னாள் சபாநாயகரும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று மதுரையில் காலமானார். அவருக்கு வயது 77வயது முதிர்வின் காரணமாக 3 மாதங்களாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் உடல் நாளை (22-ந்தேதி)மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூர் பகுதியை அடுத்த முத்தப்பன்பட்டியில் அவரது தோட்டத்தில் […]

தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்யக்கோரி கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான விவசாயிகள், அடித்தட்டு மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் வார்டு கழிப்பறைகளில் கதவு இல்லாமல் உள்ளது.இதனால் உள்நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு கதவுகள் அமைக்க வேண்டும். நோயாளிகளுக்கு மாத்திரைகள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வாகன சோதனை: புகையிலை பொருட்கள் கடத்திய 6 பேர் சிக்கினர்

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபானம் விற்பனையை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், சப்- இன்ஸ் பெக்டர்கள் மாதவராஜ், நாராயணசாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தனிப்படை போலீசார் எட்டயபுரம் ரோடு தொழில் பேட்டை அருகில் இரவு நேரத்தில் வாகன சோதனை நடத்தினா். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த தடி வீராசாமி (வயது 52) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ல் அப்போது, […]

கோவில்பட்டி

தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினா்.விளாத்திகுளம் தாலுகா மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் எந்திரங்கள் மூலம் ஏராளமான டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பவர்களை தடுத்து நிறுத்தவும், மணல் குவாரி உரிமையை ரத்து செய்ய வேண்டும் […]

கோவில்பட்டி

போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சி.சி. மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.கூட்டத்திற்கு கவுரவ தலைவர் பிச்சையா தலைமை தாங்கினார், செயலாளர் துரைராஜ், துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பொருளாளர் ராமன் வரவேற்று பேசினார், தலைவர் ராமச்சந்திரன் சங்க வளர்ச்சி பற்றி பேசினார், சங்க உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் தொடர்பாகவும், மற்றும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன, துணைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்ட […]

செய்திகள்

தி.மு.க.வில் இருந்து விலகியதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு

தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொது செயலாளர் பதவியை ராஜினமா செய்ததாக தகவல்கள் பரவி வந்தன.சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.இந்த நிலையில், தி.மு.க.வில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை ……