கோவில் உண்டியல் திருடனை பிடித்த சப்-இன்ஸ்பெக்டருக்கு வெகுமதி- பாராட்டு
கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் மற்றும் போலீசார் பணிக்கர்குளம் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தெற்கு இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த பூல்பாண்டி மகன் சதீஷ் (19) என்பதும் அவர் வடக்கு இலந்தைகுளம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை உடைத்து ரூ. 2,050/- திருடியதும் தெரியவந்தது.
உடனே மேற்படி உதவி ஆய்வாளர். பால் மற்றும் போலீசார் எதிரி சதீஷை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட உண்டியல் பணம் ரூ 2,050/-யும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரோந்து பணியின்போது துரிதமாக செயல்பட்டு உண்டியல் திருட்டு எதிரியை கைது செய்த கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று (19.9.2022) நேரில் பாராட்டி வெகுமதி வழங்கினார்.







