• May 5, 2024

Month: August 2022

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி இல்லத்து பிள்ளைமார் திருமண மகாலில் இன்று காலை 9 மணிக்கு இலவச கண் பரிசோதனை முகாம் தொடங்கியது. மதியம் 2 மணி வரை நடக்கிறது.இல்லத்து பிள்ளைமார் இளைஞர் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைத்து நடத்திய இந்த முகாமில் கண் நோயாளிகளுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்பட்டது. கண் டாக்டர்கள் ஜெயப்பிரியா, ஸ்ரீதர் ஆகியோர் இந்த சோதனையை நடத்தினார்கள். இம்முகாமில் கண் மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. கண் கண்ணாடிகள் […]

கோவில்பட்டி

கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறித்த 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் துவரந்தை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி இவர் தனது மனைவி கிருஷ்ணவேணி (24) மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 26.6.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார்.குளத்தூர் – வேம்பார் கடற்கரை சாலை சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கருப்பசாமி ஓட்டி வந்த வாகனத்தை மடக்கி கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க […]

கோவில்பட்டி

உறுப்பினர் சேர்ப்பில் ம.தி.மு.க.வினர் கவனம் செலுத்த வேண்டும்-வைகோ

கோவில்பட்டி சவுபாக்கியா மகாலில் இன்று காலை ம/தி.மு.க.தொண்டர் ராம்குமார் ரவி-லட்சுமி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.திருமண விழாவில் ம.தி.மு.க.பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், அவர் பேசுகையில், “மணமக்கள் ஒற்றுமையாக தாய், தந்தையருக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.தனது பேச்சின் இறுதியில் வைகோ, “செப்டம்பர் 15 அண்ணா பிறந்ததினம் வருகிறது. ம.தி.மு.க/தொண்டர்கள் உறுப்பினர் சேர்ப்பு பணியில் தீவிரம் காட்டவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.திருமணவிழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், […]

கோவில்பட்டி

விளம்பரத்துக்காக பட்ஜெட் தாக்கல் செய்தால் விவசாய உற்பத்தி பெருகாது; விவசாய சங்கங்களின் தலைவர்

தமிழக அனைத்து விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.தமிழக அனைத்து விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ் தலைமை தாங்கினார். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், அய்யப்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிந்ததும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியாவது:-தென்மேற்கு பருவ மழை பெய்தும், […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில், கண்கவர் விநாயகர் சிலைகள் விற்கும் வடமாநிலத்தினர்

முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். கணங்களின் தலைவனாக விளங்கும் கணபதி அவதரித்த தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்தாண்டு வருகிற 31-ந்தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடக்கூடிய ஒரு சில முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. கணபதிக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்ட பல பதார்த்தங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம்.விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துவிடும். […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பரிதாபம்: தவறுதலாக ஏறிய பெட்டியில் இருந்து கீழே இறங்கிய

தென்மாவட்டங்களில் அதிக பயணிகள் வந்து செல்லும் ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 2 பிளாட்பாரங்கள் உள்ளன. பழைய பிளாட்பாரமான முதல் பிளாட்பாரத்தில் திருநெல்வேலி மார்க்கமாக செல்லவேண்டிய ரெயில்கள் வந்து செல்கின்றன.புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது பிளாட்பாரத்தில் விருதுநகர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த பிளாட்பாரத்தில் போதுமான வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.மிக முக்கியமாக நிழற்குடைகள், பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் கிடையாது. ரெயில் வரும்போது எந்த நம்பர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகம் திறப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.194.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துஆ துறை கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.சென்னையில் நடைபெற்ற விழாவின்போதுமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் மருத்துவ கருவிகளை பயன்பாட்டிற்காக வழங்கினார். மேலும் 236 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.35 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைக்கான […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நடுரோட்டில் சாய்ந்த மரம்; மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் முன்னாள் ராணுவத்தினர் நல உதவி மையம் மற்றும் ராணுவ வீரர்களின் நினைவிடம் உள்ளது. அதன் அருகில் சாலையோரம் வாகை மரம் இருந்தது. மரத்தை தாண்டி உரிமையியல் நீதிபதி குடியிருப்பு பகுதி உள்ளது.இந்த் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது, எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் இருந்த இந்த மரம் பகல் 12 மணி அளவில் திடீர் என சாய்ந்து விழுந்தது. நல்லவேலையாக அந்த சமயத்தில் பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லை. சாலையை கடந்து […]

கோவில்பட்டி

கொலை செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் குடும்பத்தினருக்கு கீதாஜீவன் ஆறுதல்

கோவில்பட்டியை அடுத்துள்ள திட்டங் குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பொன்ராஜ் (வயது67). இவர் கடந்த 22-ம் தேதி தனது தோட்டத்தில் இருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ஜனதா கட்சி நிர்வாகி மற்றும் ஒருவரை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் வீட்டிற்கு இன்று சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த […]

செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு அறிக்கையில் பதில்; நீதிபதி ஆறுமுகசாமி பேட்டி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இறுதி அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை விரைவில் சட்டமன்றத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் முக ஸ்டாலினிடம் தாக்கல் செய்த பின் நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-154 […]