உறுப்பினர் சேர்ப்பில் ம.தி.மு.க.வினர் கவனம் செலுத்த வேண்டும்-வைகோ
![உறுப்பினர் சேர்ப்பில் ம.தி.மு.க.வினர் கவனம் செலுத்த வேண்டும்-வைகோ](https://tn96news.com/wp-content/uploads/2022/08/download-19-850x525.jpg)
கோவில்பட்டி சவுபாக்கியா மகாலில் இன்று காலை ம/தி.மு.க.தொண்டர் ராம்குமார் ரவி-லட்சுமி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமண விழாவில் ம.தி.மு.க.பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், அவர் பேசுகையில், “மணமக்கள் ஒற்றுமையாக தாய், தந்தையருக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தனது பேச்சின் இறுதியில் வைகோ, “செப்டம்பர் 15 அண்ணா பிறந்ததினம் வருகிறது. ம.தி.மு.க/தொண்டர்கள் உறுப்பினர் சேர்ப்பு பணியில் தீவிரம் காட்டவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
திருமணவிழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், ராமானுஜ கணேசன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், விநாயகா ரமேஷ், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், முன்னாள் எம்.பி. சிப்பிபாறை ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழத்து தெரிவித்தனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)