• May 17, 2024

Month: June 2022

செய்திகள்

மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது; வங்கி பெண் மேலாளர் பரிதாப சாவு

சென்னை போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கபிலன். இவருடைய மனைவி வாணி (வயது 57). இவர் கே.கே. நகரில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.நேற்று மாலை வாணி, அவரது தங்கை எழிலரசியுடன் காரில் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையையொட்டி இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாலையின் குறுக்கே சாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த காரின் […]

கோவில்பட்டி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் போலீசார் நேற்று (24.6.2022) கருணாநிதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் முருகன் (வயது 39) என்பதும் அவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே முருகனை கைது செய்து […]

செய்திகள்

அப்துல்கலாம் நினைவிடத்தில் கவர்னர் மரியாதை

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த தமிழக கவர்னருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பளிக்கப்பட்டது.தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் வைக்கப்பட்ட கலசத்தில் இருந்து புனித நீரானது கவர்னர் மீது தெளிக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்தார்.பின்னர் கார் மூலமாக, புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற கவர்னர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில்29-ந்தேதி,எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 29.6.2022 அன்று முற்பகல் 10.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய […]

கோவில்பட்டி

ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ்சான்று சமர்ப்பிக்கலாம்

ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ்சான்று சமர்ப்பிக்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கோட்ட தபால் நிலையங்களின் முதுநிலை சூப்பிரண்டு மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-மாநில அரசு ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியதாரர்கள், வரும் ஜூலை 1 முதல் செப்டம்பர் 3௦ வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கோவிட்-19 தோற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டத்தில், 25ந்தேதி மின்தடை செய்யப்படும் இடங்கள்

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற இருக்கிறது.எனவே, நாளை25ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை எம். துரைசாமிபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் சவலாப்பேரி, வாகைகுளம் ஆகிய பகுதிகளுக்கும். பசுவந்தனை உபமின்நிலையத்தில் […]

கோவில்பட்டி

ஆண்களுக்கு வேலைமறுப்பு: கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க மறுப்பதை கண்டித்தும், இந்த திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு […]

பொது தகவல்கள்

ஆரோக்கிய முறையில் கோழி இறைச்சி சமைப்பது எப்படி?

கோழி இறைச்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால், அதை ஆரோக்கியமான முறையில் எப்படி சமைக்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோழியின் ஒவ்வொரு பாகங்களிலும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை வெவ்வேறு அளவுகளில் உள்ளன. கோழியின் மார்பகத்தில் உள்ள இறைச்சியில் 28 கிராமுக்கு 1 கிராம் கொழுப்பு தான் உள்ளது. அதேபோல கோழியின் கால்களில் ஒவ்வொரு 28 கிராமுக்கும் 2 கிராம் கொழுப்பு உள்ளது. கோழியை சமைக்க முடிவு செய்வதற்கு முன், யாருக்கு […]

செய்திகள்

பள்ளிக்கல்வித்துறையில் 38,114 இளநிலை பணியிடம்; தற்காலிக வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இளநிலை மற்றும் முதுநிலை என 2 பிரிவுகளில் 38,114 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், துறைசார்ந்த சர்வே திட்டங்களை செயல்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள். […]

செய்திகள்

போக்சோவில் கைதானவருக்கு 13 வருடம் சிறை தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த ராஜூ என்பவரது மகன் ஆண்டிச்சாமி (வயது 24).இவர் கடந்த 2018ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணுக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திசென்று பாலியல் தொல்லை செய்ததாக கைதானார்.வடமதுரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்டிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தார். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். ஆண்டிச்சாமிக்கு 13 […]