போக்சோவில் கைதானவருக்கு 13 வருடம் சிறை தண்டனை
![போக்சோவில் கைதானவருக்கு 13 வருடம் சிறை தண்டனை](https://tn96news.com/wp-content/uploads/2022/06/fd8a78fa-f786-4294-a15a-3fbf804bc5fd-850x560.jpg)
திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த ராஜூ என்பவரது மகன் ஆண்டிச்சாமி (வயது 24).
இவர் கடந்த 2018ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணுக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திசென்று பாலியல் தொல்லை செய்ததாக கைதானார்.
வடமதுரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்டிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். ஆண்டிச்சாமிக்கு 13 வருடம் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து அவர் தீர்ப்பு வழங்கினார்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)