• April 27, 2024

பள்ளிக்கல்வித்துறையில் 38,114 இளநிலை பணியிடம்; தற்காலிக வேலைவாய்ப்பு

 பள்ளிக்கல்வித்துறையில் 38,114 இளநிலை பணியிடம்; தற்காலிக வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இளநிலை மற்றும் முதுநிலை என 2 பிரிவுகளில் 38,114 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், துறைசார்ந்த சர்வே திட்டங்களை செயல்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள்.

இந்த கல்வி அலுவலர் பணிக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு கல்வி ஊக்கத் தொகை திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் இளநிலை, முதுநிலை ஆகிய இரண்டு பிரிவுகளில் 38,114 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் tnschools.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் இளநிலை பணியிடங்களுக்கு மாதம் 32 ஆயிரம் ரூபாயும், முதுநிலை பணிகளுக்கு மாதம் 45 ஆயிரம் ரூபாயும் மதிப்பு ஊதியமாக வழங்கப்படும், மேற்கண்ட பணிகள் 2024 ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமான பணி என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *