நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் 1-5-25 முதல் நடைபெற்று வந்த இலவச யோகா & ஆங்கிலப் பயிற்சி முகாம் இன்றுடன் (07.05.2025)நிறைவு பெற்றது. 40 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உறவின் முறைத் தலைவர், உறவின்முறைச் செயலர்,பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் மற்றும் செயலர் கலந்து கொண்டனர்.அனைத்து மாணவர்களுக்குமான ஊக்கப்பரிசுகளின் செலவினங்களை உறவின் முறைத்தலைவர் மாரி கண்ணபிரான் ஏற்றுக் கொண்டார். வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் ஜான் ஸ்டேனி , ச.ரமேஷ், வே.குணசேகரன், ப.கவிதா, வெ.நர்மதா ஆகியோருக்கு நிர்வாகம் […]
மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரியார் சென்னையில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதை கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் மத கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் பேசிய மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன்,நிர்வாகி நல்லையா, நாம் தமிழர் கட்சி […]
என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் நிறுவனம் சாா்பில் தூத்துக்குடியில் செயல்படும் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில், தலா 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகள் இயங்கி வருகின்றன. இந்த அனல்மின் நிலையத்தில் சுமாா் 1350 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்கள் தங்களுக்கு நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும் இது தொடா்பாக […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (6.5.2025) நடைபெற்றது. இந்த குற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் […]
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமைக் கழகம் தாயத்தில் உள்ள பெரியார், அண்ணா திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு மற்றும் நீர் மோர் வழங்கினார் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு-இராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன், மா.வை.மகேந்திரன், பூவை மு.பாபு, கருணாகரன், தென்றல் நிசார் உள்பட பலர் கலந்து […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் மகேந்திரன், கற்பகம், வார்டு செயலாளர்கள் சசிக்குமார்,செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடியை சேர்ந்த, நில உரிமையாளர் ஒருவருக்கு அவரது செல்போனில், தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மேற்சொன்ன நில உரிமையாளர் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தான் ஒரு தள பொறியாளர் என்றும் உங்களது நிலத்தில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெற்றுத் தருவதாக கூறியதோடு, மேலும் சில நபர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி செல்போன் டவர் அமைப்பதற்கு ஆவண கட்டணம், பொருட்கள் செலவு, […]
மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்த சரண்யாவை, நேற்று மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி சாமுவேல், சரவணன் என்ற இரு மகன்களுடன் மதுரையில் […]
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார். இதுகுறித்து பார்த்திபன் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு […]
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் மலை அடிவார கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஓம்சக்தி அம்மன், புலியடி கருப்பசாமி திருக்கோவில் 3ம் ஆண்டு கொடை விழா நடைபெற்றது. கோவில் கொடை விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, தொடர்ந்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம்,அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர் போடுசாமி,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் […]