கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் திமுக சார்பில் மதிய உணவு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் மகேந்திரன், கற்பகம், வார்டு செயலாளர்கள் சசிக்குமார்,செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
