கோவில் கொடைவிழாவில் அன்னதானம்

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் மலை அடிவார கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஓம்சக்தி அம்மன், புலியடி கருப்பசாமி திருக்கோவில் 3ம் ஆண்டு கொடை விழா நடைபெற்றது.
கோவில் கொடை விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, தொடர்ந்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம்,அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர் போடுசாமி,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன்,அதிமுக நிர்வாகிகள் விஜயராஜ்,வேல்ராஜ்,ரேவதி,கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


