• May 14, 2025

Month: May 2025

தூத்துக்குடி

4 மத போதகர்கள் சஸ்பெண்ட் : துாத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகம் நடவடிக்கை

தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும், துாத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கவனித்து வருகிறார். இந்நிலையில், கடந்த  8ம் தேதி துாத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டயோசீசன் அலுவலக வளாகத்தில் ஜோதிமணியின் காரை வழிமறித்து மத போதகர்கள் சிலர் தகராறு செய்தனர்.  பிஷப் செல்லையா காரையும் அவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஜோதிமணியின் உதவியாளர் கருணாகரன் என்பவர் தாக்கப்பட்டார். துாத்துக்குடி ஏ.எஸ்.பி., மதனிடம் அவர் […]

செய்திகள்

தனியாா் மினி பஸ்களை ஜூன் 15 முதல் கூடுதல் தூரம் இயக்க அனுமதி

தமிழகத்தில் அனைத்துக் கிராமங்களுக்கும் மற்றும் குறுகிய வழிப்பாதை கொண்ட பகுதிகளிலுள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் நோக்கில், தனியாா் மினிபஸ் சேவை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் தற்போது 2,950 மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பஸ்களின் சேவையை மேம்படுத்தும் வகையில், ‘தனியாா் மினிபஸ்களை போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கி.மீ. இயக்கவும், சேவையுள்ள இடங்களில் 4 கி.மீ. இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கி.மீ. கூடுதலாக இயக்க […]

கோவில்பட்டி

உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா

கோவில்பட்டி உண்ணாமலை தொழில் நுட்பக்  கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர்  விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பார்வதி வரவேற்று பேசினார்.. கல்லூரி ஆண்டறிக்கையை  முதல்வர் வாசித்தார். தேர்வுகளில் அதிக மதிப்பெண் மற்றும் நூறு சதவீகித வருகை பதிவு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்,மற்றும்  எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பார்வதி ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். பின்னர் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. எலக்ட்ரிகல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் புனித சூசையப்பர் திருவுருவ பவனி; மும்மத பிரார்த்தனை

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று   மாலை 6 மணிக்கு திருத்தல பங்கு தந்தை சார்லஸ் அடிகளார் குறுக்குச்சாலை பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் உதவி பங்குத்தந்தை அருண்குமார் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள். இரவு 8 மணி  அளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சூசையப்பர் திருவுருவ பவனியை  திருத்தல பங்குதந்தை சார்லஸ் அடிகளார்,குறுக்குசாலை பங்குதந்தை ஞானபிரகாசம் அடிகளார் ,உதவி பங்குதந்தை அருண்குமார் அடிகளார், டவுண் பள்ளிவாசல் இமாம் முஹம்மதுஜமீல் பைஜி ,கோவில்பட்டி ஸ்ரீமதி […]

செய்திகள்

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்மேகம் சூழ்ந்த நிலையில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று மாநில மருந்து உற்பத்தியாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனால் ரூ.100 கோடி வரை வருவாய் […]

செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது; கோவில்பட்டி கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன்

கோவில்பட்டி மத்திய ஒன்றியதிமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி,கிளைச் செயலாளர்கள் மகாராஜன்,கிருஷ்ணமூர்த்தி,முருகன்,வழக்கறிஞர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கீதாஜீவன்,தலைமைக் கழகப் பேச்சாளர் ராவணன்,தொகுதி பார்வையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். […]

செய்திகள்

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள பயங்கரவாத தளங்கள் அழிப்பு

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.  பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை குறிவைத்து  அதிரடியாக பதில் தாக்குதல் தொடுத்தது. பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் […]

செய்திகள்

இந்தியாவை நோக்கி நகரும் பாகிஸ்தான் படைகள்; பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய

எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக இன்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:- நான் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல்களையும் தீவிரப்படுத்தல்களையும் உருவாக்கியதாக கூறியுள்ளேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் தரப்பின் இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் தீவிரப்படுத்தல்களை இந்தியா பொறுப்புடன் மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றி உள்ளது.   பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான். இந்திய ஏவுகணைகள், ஆப்கானிஸ்தானை […]

செய்திகள்

நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் கடிதம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாவட்ட அக்கட்சி தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இந்த தொகுதிகளில் 2001-ம் ஆண்டு முதல் இன்று வரை அ.தி.மு.க. வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 25 ஆண்டு காலமாக எம்.எல்.ஏ.வாக 5 முறை போட்டியிட்டு 2 முறை படுதோல்வி அடைந்து அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பில், ஆதரவில் வாக்குகளை பெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு […]

செய்திகள்

`தீவிரவாத தாக்குதலுக்குதான் பதில் தாக்குதல் நடத்துகிறோம்’ -அண்ணாமலை

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-  “இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை இன்று நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக் கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்றுள்ளது. துணை கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர். டிரோன்களை நமது நாட்டுக்குள் […]