கோவில்பட்டியில் புனித சூசையப்பர் திருவுருவ பவனி; மும்மத பிரார்த்தனை


கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று மாலை 6 மணிக்கு திருத்தல பங்கு தந்தை சார்லஸ் அடிகளார் குறுக்குச்சாலை பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் உதவி பங்குத்தந்தை அருண்குமார் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.
இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சூசையப்பர் திருவுருவ பவனியை திருத்தல பங்குதந்தை சார்லஸ் அடிகளார்,குறுக்குசாலை பங்குதந்தை ஞானபிரகாசம் அடிகளார் ,உதவி பங்குதந்தை அருண்குமார் அடிகளார், டவுண் பள்ளிவாசல் இமாம் முஹம்மதுஜமீல் பைஜி ,கோவில்பட்டி ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ண பக்த இயக்க திருமடபள்ளி ரமேஷ் ஆகியோர் இணைந்து மும்மத பிராத்தனைகளுடன் பவனி தொடங்கி வைக்கப்பட்டது.

புனித சூசையப்பர் திருவுருவ பவனி, திருத்தலத்திலிருந்து தொடங்கி மெயின் ரோடு,மாதாங்கோவில் தெரு ,எட்டையபுரம் ரோடு, புது ரோடு வழியாக திருத்தலம் வந்து சேர்ந்தது.
இதில் ஏராளமான இறை மக்கள் ஜெபம் செய்தவாறு கலந்து கொண்டனர்.இறை மக்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்க்கப்பட்டது மூன்றாம் நாள் திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது,


