உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா

கோவில்பட்டி உண்ணாமலை தொழில் நுட்பக் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பார்வதி வரவேற்று பேசினார்.. கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர் வாசித்தார்.
தேர்வுகளில் அதிக மதிப்பெண் மற்றும் நூறு சதவீகித வருகை பதிவு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்,மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பார்வதி ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

பின்னர் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை உதவி பேராசிரியர் சத்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.


