மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது; கோவில்பட்டி கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

கோவில்பட்டி மத்திய ஒன்றியதிமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி,கிளைச் செயலாளர்கள் மகாராஜன்,கிருஷ்ணமூர்த்தி,முருகன்,வழக்கறிஞர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கீதாஜீவன்,தலைமைக் கழகப் பேச்சாளர் ராவணன்,தொகுதி பார்வையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம்,மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் தங்கமாரியம்மாள்,வழக்கறிஞர்கள் ராமச்சந்திரன், நாகராஜன்,மாவட்ட பிரதிநிதிகள் அசோக் குமார், முருகன்,மாரீஸ்வரன்,தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் பழனிக்குமார்,கற்பகம்,தொமுச நாகராஜ்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கணேசன்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மேனகா,ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பாலம்மாள்,ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி,ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுச்சாமி,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், அழகுராஜ்,பொருளாளர் கண்ணன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உத்ரகுமார்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மத்தியஒன்றிய துணைச் செயலாளர் சின்னத்தாய் நன்றி கூறினார்.

இதேபோல், கோவில்பட்டி நகர திமுக சார்பில் நான்காண்டு திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் புதுக்கிராமத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கோவில்பட்டி நகர்மன்ற தலைவர்,திமுக நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார்,நகர பொருளாளர் ராமமூர்த்தி,நகர் மன்ற உறுப்பினர்கள் சண்முகவேல்,மகபூப் ஜெரினா,சுரேஷ்,வார்டு செயலாளர்கள் சுடலைமுத்து,ஜோதி பாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன்,தலைமைக் கழக பேச்சாளர் பிரிட்டோ அலெக்சாண்டர்,தொகுதி பார்வையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா,பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணி,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தவமணி,நகர அவைத்தலைவர் முனியசாமி,நகரத் துணைச் செயலாளர்கள் அன்பழகன், காளியப்பன்,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி,புஷ்பராஜ்,மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி,நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர்மன்ற உறுப்பினர் சுதாகுமாரி நன்றி கூறினார்

இந்த கூட்டங்களில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசும்போது கூறியதாவது:-
அனைத்து பகுதிகளும் முன்னேற வேண்டும். புதிய தொழில்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் 4 ஆண்டுகள் ஆட்சி நடந்துள்ளது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் ஆட்சியின் முக்கிய நோக்கம்.
மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் முகாமில் விண்ணப்பங்கள் வழங்கலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி, குழந்தைகள் பிளஸ் 2 வரை படிக்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளின் உயர்கல்வி படிக்க அனைத்து உதவிகளை வழங்கி வருகிறார். இது மாணவிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் சமுதாயம் முன்னேறினால் தமிழ் சமுதாயமே முன்னேறும் என்ற அடிப்படையில் மாணவிகள் உயர்கல்விக்கு அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.
பொருளதார வளர்ச்சி அகில இந்திய அளவில் 6.5 சதவீதம் தான். பொருளாதார வளர்ச்சி என்பது 9.69 சதவீதம் என இந்திய அரசு சொல்கிறது. தனிநபர் வருமானம் தமிழகத்தில் தான் அதிகம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மருத்துவ வசதிகள் உள்ளன. இவ்வாறு ஒவ்வொன்றிலும் அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் என இந்திய அரசு சொல்கிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது வழங்கி உள்ளது. இதில். 2.25 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன் மாநிலமாக வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ் மொழியை காத்திட வேண்டும். தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட வேண்டுமென முதல்வர் பாடுபட்டு வருகிறார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கரோனா காலத்தில் யாரும் வெளியே செல்லக்கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது என்றனர். ஆனால், கரோனா காலத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்த ஒரு முதல்வர் மு.க.ஸ்டாலின். கரோனா காலத்தில் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கினார். அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு அடக்குமுறை இருந்தது. ஆனால், உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்தவித அடக்குமுறையையும் கடைபிடிக்கவில்லை. மேலும், அவர்கள் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
பெண்களுக்கு ரூ.34 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். கந்துவட்டி கொடுமைப்படுத்தினால் தண்டனை உண்டு என முதல்வர் தனி சட்டம் இயற்றியுள்ளார். பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என எடப்பாடி கூறினார். ஒரே ஒரு ரெய்டு தான் அவரது உறவினர் வீட்டில் நடந்தது. உடனடியாக டெல்லி சென்று பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். அவர்களது கூட்டணி பார்த்து யாரும் பதறவில்லை.

திமுகவின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும். அதில் பலனடையாத மக்களுக்கு தேவையானவற்றை செய்து பலனடைய செய்வோம். தலைவர் மு.க.ஸ்டாலிள் 60 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் உள்ளார்.. ஆனால், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் ஏதோதோ பேசுகின்றனர்.
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
