காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த இக்கூட்டத்தில் மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2½ மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-* இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. * சிந்து நதி ஒப்பந்தத்தை […]
நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த 1996- 2001 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து வேலூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் துரைமுருகன் மீதான வழக்கை மீண்டும் வேலூர் கோர்ட்டு விசாரிக்க வேண்டும். அவரை வழக்கிலிருந்து விடுவித்த உத்தரவை ரத்து […]
அ.தி.மு.க.வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் பெயரைக் குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்து வந்தனர். குறிப்பாக, கே.ஏ.செங்கோட்டையன் பொதுக்கூட்ட நிகழ்வுகளில் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து வந்தார். சென்னையில் நேற்று இரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தார். இதற்கிடையே, தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி […]
நெல்லை மாவட்டம் களக்காடு வனச்சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. ‘இப்பணிகளை புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தொடங்கி வைக்கிறார். வனசரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் வரையாறு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இதனை முன்னிட்டு களக்காடு தலையணை வனப்பகுதி மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் முதலில் அறிவித்தனர். எனினும் கோடை விடுமுறையை முன்னிட்டு களக்காடு தலையணை மற்றும் […]
“இல்லம் தோறும் நூலகம்” என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் குறிக்கிறது. இது ஒரு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், வாசிப்பால் பயனடையவும் உதவுகிறது. தமிழக அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டிக் கிளைச் செயலாளர் பிரபுஜாய் இல்லத்தில் நூலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று […]
இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டல்களில் விரும்பி சாப்பிடும் கிரில் சிக்கன்,பிரை சிக்கனுக்கு முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைசை பயன்படுத்துகிறார்கள். மேலும் ஷவர்மா, தந்தூரி, சான்ட்விச், சலாட், பார்பிகியூ உள்பட துரித உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.இந்த நிலையில் முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது என்பன உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் […]
கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிரசவ வார்டு வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது ஸ்ரீ ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினரும் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகியுமான சண்முகவேல் முன்னிலை வகித்தார். அன்னதான நிகழ்ச்சியை ஆசிரியை ஆனந்த வள்ளி சீனிவாசன் தொடங்கி வைத்தார். முன்னதாக உலக மக்கள் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை […]
திருவாரூர் மாவட்டம் திருப்பாம்பரம் சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்,. மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம். இக்கோவில் வரலாற்றை காண்போம்… கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி […]
தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தார். அந்த காலக்கட்டத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு […]
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது. பயணிகள் காத்திருப்பு அறையில் நடந்த கூட்டத்தில், பெண் பயணிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் தூத்துக்குடி ரெயில்வே காவல் உதவி ஆய்வாளர் பெருமாள், மகாகிருஷ்ணன் ஆகியோர் பெண் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக விளக்கினர். பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானங்களையோ அல்லது தின்பண்டங்களையோ வாங்கி உண்ண வேண்டாம். ரெயில் பயணத்தின்போது நகைகளை அணிந்து கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்வதையும், படுத்து […]