கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் காயமடைந்தனர். சென்னையில் இருந்து நாகை நோக்கி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ் புறப்பட்டு சென்றது.. விழுப்புரம் – நாகை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் வந்தது. இந்த இரண்டு பஸ்களும் எதிரபாராத விதமாக மோதிக்கொண்டன. தனியார் பஸ் இடது பக்கம் திரும்ப […]
பங்குனி உத்திரம் நாளை நினைவுபடுத்தும் வகையில் 25 தகவல்கள் இங்கு விளக்கப்படுகிறது. அவற்றை இங்கு பார்க்கலாம்… 1. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். 2. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, […]
பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்படுவதாக ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:- பா.ம.க.வின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன். […]
கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் 2624வது மஹாவீர் ஜெயந்தி விழா செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு கொண்டாடப்பட்டது ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனர் தேன்ராஜா அனைவரையும் வரவேற்றார், கழுகுமலை 1008 மஹாவீர் அதிசய ஷேத்திர கமிட்டி செயலர் முகேஷ் தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில். மஹாவீரரின் போதனைகளான கொல்லாமை,உண்மையே பேசு,திருடாதே, போன்ற போதனைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். விழாவுக்கு ரித்திக் ,பிரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிங்கிள் , மோக் ஷா ஆகியோர் ,பக்தர்களுக்கு லட்டு வழங்கினார்கள். நிகழ்வில் அறக்கட்டளை […]
பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் பங்குனி உத்திரம் 11.4.2025 வருகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே முருகன் கோவில்களில் இத்தினத்தில் வருடாந்திற திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும். மீனாட்சி கல்யாணம் சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் […]
சிறுபான்மையின மக்களை உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதவை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர்,நகர்மன்ற உறுப்பினர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.நகரத் துணைச் செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன்,தாலுகா துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன்,மாவட்டக்குழு உறுப்பினர்கள் பரமராஜ்,சேதுராமலிங்கம் […]
திராவிட இயக்கங்களில் ஆணிவேரான சுயமரியாதை இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவரான பட்டிவீரன்பட்டி டபிள்யு.பி..ஏ. சவுந்தரபாண்டியனாருக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஆலங்குளம் தொகுதி உறுப்பினர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் வேண்டுகோள் விடுத்து பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ” ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் கோரிக்கையை ஏற்று பட்டிவீரன்பட்டி டபிள்யு.பி..ஏ. சவுந்தரபாண்டியனார் அவர்களுக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து […]
ஜிப்லி கலையை பயன்படுத்துகிறீர்களா? இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் எச்சரிக்கையை படிங்க ….!
சென்னை இணையவழி குற்றப்பிரிவு, தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஜிப்லி கலையைப் பயன்படுத்துவது குறித்த பொது எச்சரிக்கை சமீபத்திய நாட்களில், ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களிளிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஜிப்லி AI பயனர்கள் பதிவேற்றும் செல்பிகள் அல்லது புகைப்படங்களைப் பயன்படுத்தி பயனரை மகிழ்விக்கும் வகையில் அவரது முக அம்சங்களின் அடிப்படையில் அனிம் போன்ற பதிப்புகளை உருவாக்குகிறது. இருப்பினும், ஜிப்லி கலையைச் சுற்றியுள்ள சாத்தியமான ஆபத்துக்களை பயனர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். […]
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் திருநாள் அன்று பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. நடப்பு ஆண்டு 11.4.2025 அன்று (வெள்ளிக் கிழமை) பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள […]
கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில், நீதிமன்ற சமரச நாள் நாள் குறித்த விழிபுணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நீதிபதிகள் கடற்கரை செல்வம்,பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமரசர்களாக பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் சந்திரசேகர், சிவக்குமார், கதிர்வேல்,ரமணன், விஜயகுமார் பழனிச்சாமி,வழக்கறிஞர்கள்,நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சார்பு நீதிமன்றத்தில் இருந்து எட்டயபுரம் ரோடு […]