தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 14-ந் தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது.அன்றைய தினம் பவுனுக்கு ரூ.120-ம், அதற்கு மறுநாள் பவுனுக்கு ரூ.280-ம் குறைந்து மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் வந்து ஆறுதலை கொடுத்தது. இந்த நிலையில் நேற்று விலை […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் தொழில்நுட்ப கருத்தரங்கு (GEN-E TRIX 2025) நடைபெற்றது, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை சார்பில் நடந்த இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கில் காகித விளக்கக்காட்சி,சட்டத்தை யூகித்தல்,தொழில்நுட்ப வினாடி வினா,தனிநடிப்பு, புதையல் வேட்டை, எலக்ட்ரானிக்ஸ் ஸ்போர்ட்ஸ் போன்ற போட்டிகள் நடை பெற்றது. ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி,சிவகாசி, ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி,விருதுநகர், திருச்சி அண்ணா பல்கலைக் கழகம், உதயா பொறியியல் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி ஸ்டேட் பேங்க் முன்பு அமலாக்கதுறையை கண்டித்தும்,மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருண்பாண்டியன் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, மாவட்ட செயலாளர் துரைராஜ்,பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர்,ஐஎன்டியூசி ராஜாசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பிரேம்குமார், காமராஜ்,மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் கார்த்தி காமராஜ், பொது செயலாளர் சண்முகராஜா,சமூக ஊடக பிரிவு […]
சுந்தரலிங்க தேவேந்திரனார் 255 வது பிறந்தநாள்; கோவில்பட்டியில் உருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை
சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்க தேவேந்திரனார் 255 வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் உள்ள சுந்தரலிங்கனார் திருவுருவச் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,முன்னாள் […]
சென்னை ஆலந்தூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் சம்பங்கள், வன்முறை சம்பவங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையில் சாதி, மத ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு மன ரீதியான ஆலோசனைகள் வழங்கி குற்றங்களை தடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி. பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆனால் மீண்டும் […]
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், 1,900ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இக்கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது. இக்கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார். இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணம் கோலாகலமாக நடந்த […]
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உதரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சங்கத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் […]
கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55), இவர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று காலையில் பஜாருக்கு வந்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பினார். மாதங்கோவில் சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் திடீரென பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு […]
ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் ,அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். அரசாணைகள் தமிழில் மட்டும் வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் தமிழில் இருக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க […]
255வது பிறந்த நாள்: கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு ஆட்சியர் இளம்பகவத் மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது 255வது பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் வீரன் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கோவில்பட்டி கொடாட்சியர் மகாலட்சுமி யும் மரியாதை செலுத்தினார். […]