தமிழில் மட்டுமே அரசாணை; அரசு உத்தரவு

ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் ,அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். அரசாணைகள் தமிழில் மட்டும் வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசு சார்பில் வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் தமிழில் இருக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசு பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்றும் அரசு உத்தவு பிறப்பித்துள்ளது.

