கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆய்வகங்கள் திறப்புவிழா இன்று நடைபெற்றது.இவ்விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படி கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க உப தலைவர் செல்வராஜ் மல்டிமீடியா இன்டராக்டிவ் பேனலை இயக்கி தொடக்கி வைத்தார்.சங்க செயலாளர் ஜெயபாலன் வேதியியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். சங்க பொருளாளர் சுரேஷ் குமார் இயற்பியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். பத்திரகாளியம்மன் திருக்கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், கணினி […]
தூத்துக்குடி. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருபதாவது:- தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2024 ஆகஸ்டு மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (9.8.2024) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் கட்டாயம் தனியார்துறை வேலை இணையத்தில் (www. tnprivatejobs.tn.gov.in) பதிவுச்செய்தல் வேண்டும். இந்த மாதாந்திர […]
மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோவில்பட்டியில் 2 இடங்களில் மறியல்: கம்யூனிஸ்ட் கட்சியினர் 606
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமையிலான கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து, கிழக்கு பூங்கா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பிரதான சாலையில் வந்த அவர்களை தனியார் மண்டபம் முன்பு டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட நகரச் […]
தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறிவிடும்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வட சென்னை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் வட சென்னை தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட கழகச் செயலாளருமான டி.ஜெயக்குமார், வட சென்னை தொகுதி கழக வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோ, மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது, ஆலோசனை கூட்டத்தில், 2026 […]
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் ‘பட்டியல் வகுப்பினர்’ என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் 7 நீதிபதிகள் […]
வயநாடு முண்டகை பகுதியில் நிலச்சரிவால் தகர்ந்த வீடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முண்டகையில் மீட்கப்படும் உடல்கள் சூரல்மலைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே சூரல்மலை- முண்டகை இடையே ராணுவத்தினர் அமைக்கும் இரும்பு பாலம் தயாராகி வந்தது. தற்போது இரும்பு பாலம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் என்.டி.ஆர்.எப். மற்றும் முப்படைகளும் துரிதமான மீட்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை […]
தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ், தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை. பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர். அவர்கள் நேற்று தங்கள் தமிழ்நாடு சுற்றுபப்யணத்தை தொடங்கினர். வருகிற 15-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார்கள். பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் பண்பாட்டுப் பயணத்தை முதலமைச்சர் மு.க. […]
கேரள மாநிலம் வயநாட்டில் 3 கிராமங்கள் நிலச்சரிவில் புதைந்தன. 250-க்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கும் சூழலில் இன்னும் நிறைய பேர் மண்ணில் புதைந்து இருப்பதால் தேடுதல் பணி நேற்று 3 வது நாளாக நீடித்தது. சூரல்மலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக சமூக வலைதளத்தில் புகைப்படம் வைரலான நிலையில், தாங்கள் பாதுப்புடன் இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞர் தீரஜ் என்பவர் நானும் எனது சகோதரிகள் 2 பெரும் […]