வயநாட்டில் ராணுவத்தினர் அமைக்கும் இரும்பு பாலம்
வயநாடு முண்டகை பகுதியில் நிலச்சரிவால் தகர்ந்த வீடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முண்டகையில் மீட்கப்படும் உடல்கள் சூரல்மலைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே சூரல்மலை- முண்டகை இடையே ராணுவத்தினர் அமைக்கும் இரும்பு பாலம் தயாராகி வந்தது.
தற்போது இரும்பு பாலம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் என்.டி.ஆர்.எப். மற்றும் முப்படைகளும் துரிதமான மீட்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக மீட்புப் பணிகளை தற்காலிகமாக ராணுவ வீரர்கள் நிறுத்தினர்.இருப்பினும் முண்டக்கைக்கு ஆற்றை கடந்து செல்வதற்கான தற்காலிக பாலத்தை அமைக்கும் பணியை மட்டும் விடிய விடிய தொடர்ந்தனர்.