கோவில்பட்டி பள்ளியில் புதிய ஆய்வகங்கள் திறப்பு
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆய்வகங்கள் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படி கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க உப தலைவர் செல்வராஜ் மல்டிமீடியா இன்டராக்டிவ் பேனலை இயக்கி தொடக்கி வைத்தார்.
சங்க செயலாளர் ஜெயபாலன் வேதியியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். சங்க பொருளாளர் சுரேஷ் குமார் இயற்பியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். பத்திரகாளியம்மன் திருக்கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், கணினி ஆய்வகத்தை திறந்து வைத்தார். பள்ளி பொருளாளர் ரத்தினராஜா உயிரியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சங்க உறுப்பினர்,.ராஜேந்திரபிரசாத், பள்ளி உறுப்பினர்கள் தாழையப்பன், பால்ராஜ் மனோகரன், ஆகியோர் வருகை தந்து மாணவர்களின் நவீன கற்றல், கற்பித்தலின் நோக்கங்களையும் ஆசிரியர்கள் அதற்கேற்ற கல்விச் சூழலை உருவாக்கி அவர்களின் வளமான வாழ்க்கைக்கு உற்ற துணையாக விழங்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினர்.
தொடக்கத்தில் பள்ளி முதல்வர் பிரபு வரவேற்றார். கணினி ஆசிரியர் சுப்புலட்சுமி நன்றி கூறினார். ஆய்வக திறப்பு விழா ஏற்பாடுகளை அறிவியல் துறை, கணினி துறை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.