Month: August 2024

கோவில்பட்டி

கோவில்பட்டியில் எலும்புமுறிவு டாக்டர்கள் நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டியில் எலும்பு முறிவு டாக்டர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். நெல்லை ஆர்த்தோ கிளப், ஐஓஏ, டிஎன்ஓஏ சார்பில் கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இனாம் மணியாச்சி சிக்னல் அருகே உள்ள கோவில்பட்டி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து இருசக்கர வாக பேரணி புறப்பட்டது. டாக்டர் சுரேஷ்குமார்- (ஆசிரியர் டிஎன்ஓஏ), டாக்டர் தாமோதரன் (செயலாளர் என்ஓசி), டாக்டர் சஞ்சய், டாக்டர் மனோஜ்குமார் ஆகியோர் […]

கோவில்பட்டி

கடம்பூரில் விரைவில் தொழிற்பேட்டை ; அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை வரவேற்று பேசினார். கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான பெ.கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன்  பேசுகையில், கடம்பூர் பேரூராட்சி பகுதியில் தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும். […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு

ராணிப்பேட்டையில் வருகிற 15 முதல் 18-ந்தேதி  வரை நடைபெற உள்ள  மாவட்டங்களுக்கு இடையிலான மாநில சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது. இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி தேர்வு நேற்று  காலை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது 80க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர் தேர்வு குழு உறுப்பினர்களாக முன்னாள் இந்திய ஆக்கி வீரர் […]

கோவில்பட்டி

காமநாயக்கன்பட்டி புனித பரலோகமாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா; 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை அந்தோனி அ.குரூஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம் கடந்த 18.7.2023-ல் பேராலயமாக (பசிலிக்காவாக) உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் இந்த பேராலயத்தின் முதல் விண்ணேற்பு பெருவிழா வருகிற .6-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஏ.ஸ்டீபன் பெருவிழா கொடியேற்றுகிறார். தொடர்ந்து 10-ம் தேதி மரியாளின் இறைஅனுபவம் என்ற தலைப்பில் மரியன்னை மாநாடு நடக்கிறது. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  நிகழ்ச்சி

கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர்  கோ.பாலு கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் .கு.நெடுஞ்செழியபாண்டியன், போக்குவரத்து காவலர்கள் இராஜாராம், .வசந்தி சமூக ஆர்வலர்  மா. வேல்முருகன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய  வீடியோகள், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் சாலை விதிமுறைகளை பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைவரும் உரையாற்றினர். விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடுகளை […]

செய்திகள்

தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு முதல்- அமைச்சர் அழுத்தம்

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.. அதிமுக சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அமைப்பு செயலாளர்கள் சி பொன்னையன், டி ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஜெ.ஜெயவரதன், எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தீரன் சின்னமலையின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு […]

தூத்துக்குடி

கூட்டுறவுத்துறை பணி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளர் பணியிடத்தில் இருந்து கூட்டுறவுசார்பதிவாளர் பதவி உயர்வு பணியிடத்தில் சொந்த மாவட்டங்களில் காணப்பட்ட காலிப்பணியிடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஊழியர்களை கொண்டு நிரப்பி காணப்படும் இதர காலிப்பணியிடங்களை மூதுரிமை வரிசையில் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்திட கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை விடுத்து மூதுரிமையினை பின்பற்றாமல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை பின்பற்றிட வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு […]