தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு

 தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு

ராணிப்பேட்டையில் வருகிற 15 முதல் 18-ந்தேதி  வரை நடைபெற உள்ள  மாவட்டங்களுக்கு இடையிலான மாநில சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது.

இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி தேர்வு நேற்று  காலை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது 80க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்

தேர்வு குழு உறுப்பினர்களாக முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார், ஜான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்து வீரர்களை தேர்வு செய்தனர்.

 தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் வருமாறு:-

 லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இருந்து அஸ்வின் ராஜா, சுபாஷ், முகேஷ் குமார் , பரத், கார்த்திக் , கபிலன், கோகுல கிருஷ்ணன், சஞ்சய், யோகேஷ் ராஜா, வேல் குமார், ராகுல், மாதேஷ்,

ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகத்திலிருந்து சூரிய பாண்டியன், முகுந்தன், பிரின்ஸ் டேனியல் , சந்தோஷ்,

கூசாலிப்பட்டி ஏஎம்சி ஆக்கி அணியில் இருந்து கருணாகர பாண்டியன், முத்து ராஜேஷ்,

செயின்ட்  பால்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து சக்திவேல், தனுஷ்கோடி பாண்டி,

வேல்ஸ் ஹாக்கி அகாடமியில் இருந்து ராகுல் கார்த்திக், கயத்தார் மகா சக்தி ஆக்கி கிளப்  இருந்து இசக்கி ராஜா, இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஜீவா,

பாண்டவர்மங்கலம் ஆக்கி அணியில் இருந்து மோகன், ரோஷன் திவான் ராவ், இலுப்பை யூரணி ஆக்கி அணியில் இருந்து ஹரிஷ்,  அம்பேத்கார் ஆக்கி அணியில் இருந்து ஈஸ்வர், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

தேர்வான அனைத்து வீரர்களும் 11 8 24 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில்  நேஷனல் பொறியியல் கல்லூரி ஆக்கி மைதானத்தில் பயிற்சி முகாமுக்கு வருகை தருமாறு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆக்கி அணி தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, வழக்கறிஞர் பெரியதுரை, காளிதாஸ், வேல்முருகன் மணிகண்டன், மனோஜ் குமார், ஆகியோர் செய்து இருந்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *