கடம்பூரில் விரைவில் தொழிற்பேட்டை ; அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான பெ.கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கடம்பூர் பேரூராட்சி பகுதியில் தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை, மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், கடம்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி நாகராஜ், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் பரும்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். இந்த கூட்ட ஏற்பாடுகளை கயத்தாறு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்ன பாண்டியன் செய்திருந்தார்.