தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு முதல்- அமைச்சர் அழுத்தம் கொடுக்கவில்லை- டி.ஜெயக்குமார்

 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு முதல்- அமைச்சர் அழுத்தம் கொடுக்கவில்லை- டி.ஜெயக்குமார்

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.. அதிமுக சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அமைப்பு செயலாளர்கள் சி பொன்னையன், டி ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஜெ.ஜெயவரதன், எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தீரன் சின்னமலையின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி .ஜெயக்குமார் கூறியதாவது:-

முதலமைச்சர் வெளிநாடு பயணம் செல்வதற்கான ஹிடன் அஜந்தா எனப்படும் திட்டப் பணிகள் என்னென்ன வைத்துள்ளார் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதித்துள்ளனர்., மின்வெட்டு ஏற்படுவதால் தொழிற்சாலைகளிலும் தொழில்கள் கடுமையாக முடங்கி உள்ளது..

 தமிழகத்தில் மீன்பிடி தொழில் என்பது பாதுகாப்பானதாக இல்லை .கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை தோற்கடிக்கப்பட்ட ஒரே காரணத்தால் தான் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை தவிர வேறு எந்த அழுத்தமும் மத்திய அரசுக்கு இதுவரை கொடுக்கவில்லை.

ஆளுநர் பதவி நீட்டிப்பு விவகாரம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *