Month: June 2024

செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வா? தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் மின்சார கட்டணம் கடந்த 2022 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 1 ம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது, ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம்  இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவினை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது இதன் […]

செய்திகள்

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவர் சான்றிதழ் கட்டாயம் ;

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட புதிய அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- , மத்திய மோட்டார் வாகன விதி எண் 5ன் படி 40 வயதுக்கு  மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ்  பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெருவதற்கோ அல்லது ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும். மாநிலத்தின் ஒருசில இடங்களில் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் […]

தூத்துக்குடி

அரசு ஐ.டி.ஐ.களில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும்  கால அவகாசம் 13 ந் தேதி

தூத்துக்குடி மாவட்டத்தில்  அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2024-ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 13வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்11ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-‘  2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பஸ்கள் நிற்குமிடத்தில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம், நகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகம் இருக்கும். பயணிகள் நிற்ககூட இடம் இருக்காத அளவுக்கு சிறுவியாபாரிகள் இடங்களை ஆக்கிரமித்து கொள்வார்கள். இந்த பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும் பஸ்கள். குறிப்பிட்ட நேரத்தில் டெப்போவில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம் வந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.. அப்படி அந்த பஸ்கள் வரும்போது இடம் எப்போதுமே காலியாக இருப்பதில்லை. அந்த இடத்தில் இருசக்கர வாகனங்களை […]

தூத்துக்குடி

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மீண்டும் தொடக்கம்

கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும்  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து ஜூன் 10 முதல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் […]

கோவில்பட்டி

“முகமறியா  சிற்பி” நூல் வெளியீடு

மதுரையில் நடந்த உலக ஹைக்கூ மாநாட்டில் கோவில்பட்டி கவிஞர் இரா. சிவானந்தம் எழுதிய “முகமறியா  சிற்பி ” நூல் வெளியீடு நிகழ்ச்சி  நடைபெற்றது. ஓவிய கவிஞர் அமுதபாரதி நூலை வெளியிட  பாரதியாரின் கொள்ளுப் பேத்தி முனைவர் உமா பாரதி , சாகித்ய அகாதமியுவபுரஸ்கார் விருதாளர் கவிஞர் மு.முருகேசு, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர்  ஹாசிம் உமர், மாநாடு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாநில ஆக்கிபோட்டி : புதுச்சேரி அணிக்கு வெற்றி கோப்பை

கோவில்பட்டி  யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் 7ந் தேதி தொடங்கியது.  போட்டியின் நிறைவு நாளான இன்று(9-ந்தேதி)காலை  நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணியினர் 5-4 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.  இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் புதுச்சேரி வாரியர்ஸ் ஆக்கி அணி  2-1 என்ற  கோல் கணக்கில் கோவில்பட்டி […]

கோவில்பட்டி

மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை

கோவில்பட்டி முத்தையா மால் தெருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நகராட்சி தொடக்கப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு நற்பணி இயக்கத் தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார்.நற்பணி இயக்கத்தை சேர்ந்த கண்ணன்,பள்ளி சீருடைகளை வழங்கினார்.நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், மதிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்

செய்திகள்

சோனியா, ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 பேர் வெற்றி பெற்று எம். பி. க்கள் உள்ளனர்.  டெல்லியில் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முகாமிட்டுள்ள இவர்கள் அனைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்தனர்.  சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா  ஆகியோரை 9 பேரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள்உடன் இருந்தனர்.

செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்திய 109 பேர் கைது; கோவில்பட்டி வட்டத்தில்

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜி ஜோஷி நிா்மல்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கடத்தலைத் தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதனையடுத்து கடந்த 5 மாதங்களில் ரேஷன் பொருள்கள் கடத்தியதாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 71 வழக்குகளில் […]