Month: April 2024

செய்திகள்

நெல்லை பாஜக வேட்பாளருக்கு ரூ. 4 கோடி கொண்டு போகப்பட்டதா? விசாரணை தீவிரம்

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த 500 ரூபாய்  நோட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற  தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடத்தபட்ட சோதனையில்  இந்த பணம் கைப்பற்றப்பட்டது.  இது தொடர்பாக புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் […]

தூத்துக்குடி

தியாகிகளை கவுரவிக்கும் அரசுக்கு துணை நிற்க வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன் ஆதரவு கேட்டார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி 2-வது  முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு சைவ வேளாளா் சங்க நிா்வாகிகள் ,மத்தியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி பேசுகையில் கூறியாதாவது:-  மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நாட்டிற்காக தியாகம் செய்து மறைந்த தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில்  அவர்களது நினைவிடத்தில் உள்ள சிலைகளுக்கு ஆண்டுதோறும் அமைச்சர்கள் மூலம் ,மாலை அணிவிக்க வைத்து கவுரப்படுத்தி வருகிறார்.. […]

செய்திகள்

சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்; மதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

நா\டாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். , திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான, ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் 74 வாக்குறுதிகள் கொண்டதேர்தல்  அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (6-4-24) வெளியிட்டார்.  அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:- *மாநில சுயாட்சி செயல்படுத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் * கவர்னர்களுக்கு அதிக […]

கோவில்பட்டி

தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு: எட்டயபுரம் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆட்டு சந்தை கூடும்; வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்கு  பக்கத்து ஊர்களில் இருந்தும் வருவது வழக்கம், ஆடுகளை வளர்ப்போர் மினி வேன்களில் ஆடுகளை கொண்டு வந்து விற்று செல்வார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தை களை கட்டும். ஆனால் இன்றைய சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகளும் குறைவு, ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகளும் குறைவு. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு ரூ.5 கோடி அளவுக்கு வியாபாரம் […]

செய்திகள்

பிரசார மேடையில் மயங்கி விழுந்த தி.மு.க. எம்.எல்.ஏ. மரணம்

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமாக இருந்தவர் ந. புகழேந்தி.  இவர் கல்லீரல் புற்றுநோய் காரணமாக  சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே 2 நாட்களுக்கு  முன்பு வீடு திரும்பிய புகழேந்தி வெள்ளிக்கிழமை  விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்தபோது, புகழேந்தி எம்.எல்.ஏ. திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார். இதனையடுத்து புகழேந்தியை  முண்டியம்பாக்கம் […]

சினிமா

பகத் பாசில் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கிய கதாபாத்திரம்

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து தமிழில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.இந்நிலையில் பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் எஸ்.ஜே. […]

கோவில்பட்டி

நாட்டு பற்றற்ற பி.ஜே.பி. அரசை மக்கள் தூக்கி வீசுவார்கள்; விளாத்திகுளத்தில் கனிமொழி பேச்சு

தூத்துக்குடி  நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று  விளாத்திகுளம் சிவஞானபுரத்தில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அமைச்சர் பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூட்டணி கட்சி  நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரச்சாரத்தில் கனிமொழி பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மக்கள் களம் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொது மக்களின் குறைகளைக் […]

செய்திகள்

தேர்தல் நடத்தை விதி மீறியதாக உதயநிதி மீது அதிமுக புகார்

திருச்சி மணப்பாறை பகுதியில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி, “சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மைதான்அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து விடுபட்ட 40 லட்சம் மகளிருக்கும் அடுத்த 4 மாதங்களில் உரிமை தொகை கொடுப்பேன்” என்று கூறினார்.இந்த நிலையில் அடுத்த 4 மாதங்களில் விடுபட்ட 40 லட்சம் மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுப்பேன் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி வாலிபர் கொலை:  6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி அமுதாநகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து மகன் கருப்பசாமி (வயது 27) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக  தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ராஜா (எ) எலி (25), ஜெயசீலன் மகன் ஆரோன் (எ) ஆரோன் தயாளன் (22), பூவையா மகன் பூபதிராஜா (எ) விஜய் (எ) பூபதி (19), நாகராஜ் மகன் சுடலைமணி (எ) சுடலை (21), தூத்துக்குடி […]

செய்திகள்

சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்; வார இறுதி நாட்களில்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏப்ரல் மாதம் முழுவதும் இயக்கப்படும் என்று  தெற்கு ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. கோடை காலத்தில் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே ஏப்ரல் மாதத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். ரெயில் எண் 06057 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் சென்னை […]