தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு: எட்டயபுரம் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
![தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு: எட்டயபுரம் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்](https://tn96news.com/wp-content/uploads/2024/04/1780511-ettayapuram.jpg)
பைல் போட்டோ
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆட்டு சந்தை கூடும்; வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்கு பக்கத்து ஊர்களில் இருந்தும் வருவது வழக்கம்,
ஆடுகளை வளர்ப்போர் மினி வேன்களில் ஆடுகளை கொண்டு வந்து விற்று செல்வார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தை களை கட்டும்.
ஆனால் இன்றைய சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகளும் குறைவு, ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகளும் குறைவு. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு ரூ.5 கோடி அளவுக்கு வியாபாரம் இருந்தது. இன்று ரூ.1 கோடி வரைதான் வியாபாரம் நடந்ததாக கூறப்படுகிறது.
தேர்தலையொட்டி பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்/ 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வைத்து இருந்தால் பறிமுதல் செய்யப்படும் நிலையில் ஆடு வாங்கவோ, விற்ற பணத்தை கொண்டு செல்வதில் சிரமம் இருக்கும் என்பதால் ஆட்டு சந்தைக்கு செல்வதை பெரும்பாலோர் தவிர்த்து விட்டனர், அதனாலேயே ஆட்டு சந்தை இன்று களை இழந்து காணபட்டது,.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)