• May 8, 2024

சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்; மதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

 சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்; மதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

நா\டாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார்.

, திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான, ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் 74 வாக்குறுதிகள் கொண்டதேர்தல்  அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (6-4-24) வெளியிட்டார். 

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*மாநில சுயாட்சி செயல்படுத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்

* கவர்னர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும்

*திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

*புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்

*சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

* குடியுரிமை திருத்தச்சட்டம் ரத்து செய்யப்படும்
*ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் *சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 500 என்றும், பெட்ரோல் ரூ. 75 என்றும், டீசல் ரூ. 65 என்றும் நிர்ணயிக்கப்படும்.

*100 நாள் வேலைக்கு ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். வேலை நாள் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

*ஒரேநாடு ஒரே தேர்தல், பொதுசிவில் சட்டம் கைவிடப்படும்
*நீட் தேர்வுக்கு மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்கப்படும்

*சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

*மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்

*இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவிகிதம் என்பதை உயர்த்த சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்

*வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும்

*மக்களின் சுதந்திரத்தில் நியாயமற்றமுறையில் தலையிடும் சட்டங்களும், விதிகளும் ரத்து செய்யப்படும்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். *வேலையின்மையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் *கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
தேர்தல் அறிக்கை வெளியிட்டபிறகு  மதிமுக பொதுசெயலாளர் வைகோ , செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது , “திருச்சி, புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் திறக்கப்படும்” என்று கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *