• May 8, 2024

பிரசார மேடையில் மயங்கி விழுந்த தி.மு.க. எம்.எல்.ஏ. மரணம்

 பிரசார மேடையில் மயங்கி விழுந்த தி.மு.க. எம்.எல்.ஏ. மரணம்

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமாக இருந்தவர் ந. புகழேந்தி.  இவர் கல்லீரல் புற்றுநோய் காரணமாக  சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே 2 நாட்களுக்கு  முன்பு வீடு திரும்பிய புகழேந்தி வெள்ளிக்கிழமை  விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொள்ள வந்தபோது, புகழேந்தி எம்.எல்.ஏ. திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார். இதனையடுத்து புகழேந்தியை  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்  இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து  திமுக தொண்டர்களின் அஞ்சலிக்காக விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் எடுத்து செல்லப்பட்டது. மாலை 4 மணி வரை அறிவாலயத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பின்னர் புகழேந்தியின் உடல் அவரது சொந்த கிராமமான அத்தியூர் திருவாதியில் நாளை மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த புகழேந்திக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் திமுக தலைமை வய்ப்பளித்தது.

அந்த தேர்தலில் .வெற்றி பெற்ற புகழேந்தி , அந்த தொகுதி மக்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தார்.

முதல் அமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

முதல் அமைச்சர் மு.க;.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

புகழேந்தி எம்.எல்.ஏ., நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *