நெல்லை பாஜக வேட்பாளருக்கு ரூ. 4 கோடி கொண்டு போகப்பட்டதா? விசாரணை தீவிரம்
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடத்தபட்ட சோதனையில் இந்த பணம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்,
நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக, கைதானவர்கள் வாக்குமூலம்.அளித்தனர், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வீட்டில் பறக்கும் படை சோதனை.மேற்கொண்டனர்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பாஜக பிரமுகரிடம் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட தகவலை வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.