சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்; வார இறுதி நாட்களில் இயக்கப்படும்
![சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்; வார இறுதி நாட்களில் இயக்கப்படும்](https://tn96news.com/wp-content/uploads/2024/04/prayagraj-hindustan-february-boa-850x560.jpg)
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏப்ரல் மாதம் முழுவதும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
கோடை காலத்தில் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே ஏப்ரல் மாதத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
ரெயில் எண் 06057 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
ரெயில் எண் 06058 நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
இந்த ரயில்கள் ஏப்ரல் 5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நின்று செல்லும்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)