• May 20, 2024

Month: March 2024

செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன? அரசு வழங்க

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் வக்கீல் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் […]

செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கரூரில் கனிமொழி  பிரசாரம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி , இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திறந்த வேனில் சென்று  தேர்தல் பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்தார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணா சிலை அருகில், க.பரமத்தி கடைவீதி ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,கை சின்னத்திற்கு வாக்கு அளிக்கப் பிரச்சாரம் செய்தார். […]

செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்-ஸ்டாலின் இரங்கல்

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடைபெற இருக்கும் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு பதிலாக திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.. கூடுதலாக தொகுதி ஒதுக்கப்படாததால் கணேசமூர்த்தி மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி  கடந்த 24-ந் தேதி அன்று அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது, […]

செய்திகள்

தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி

 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஜான் பாண்டியன் களத்தில் இருக்கிறார். தனிச்சின்னத்தில் போட்டியிடுவேன் என்று அறிவித்து இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி , டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார்.  ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் சின்னத்தை ஒதுக்கவில்லை. இந்நிலையில், தென்காசி தொகுதியில் […]

செய்திகள்

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது;இன்று மனுக்கள் பரிசீலனை

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 25ந்தேதி நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டனமத்திய சென்னை தொகுதியில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 9 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்தி.மு.க. வேட்பாளர் […]

தூத்துக்குடி

தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி மத்தியில் வரவேண்டும்; தூத்துக்குடி பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தருவைக்குளத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசானுத்து, வாஞ்சி மணியாச்சி, அக்கநாயக்கன்பட்டி, மருதன்வாழ்வு, ஆயிரவன்பட்டி  ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது கனிமொழி பேசியதாவது:  கடந்த தேர்தலில் வேட்பாளராக நான் களம் கண்ட போது, எதிர்க்கட்சிகள் இவர் சென்னையில் இருந்து வருகிறார். வெற்றி பெற்றால் மீண்டும் தூத்துக்குடி வரமாட்டார் எனக் கூறினர். வெற்றி பெற்ற பின்னர் இங்கு […]

செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  சிதம்பரத்தில்  விசிக தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் தங்களுக்கு கடந்த முறை போட்டியிட்ட பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று […]

தூத்துக்குடி

தேர்தல் அலுவலர்களுடன் , பார்வையாளர் ஆலோசனை

. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக அறையினை பார்வையிட்டார். கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பெண்ணின் தற்கொலை மிரட்டல்

கோவில்பட்டி மில் தெரு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கும் சவுந்தர் என்பவருக்கும் இடையே இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது,’ . இந்நிலையில் கோவில்பட்டி தாலூகா  அலுவலகத்தில் உள்ள  நில அளவை பிரிவினர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாக கூறி லெட்சுமி தாலூகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு முன்பு இன்று காலை ததிடீரென தர்ணா போராட்டத்தில் […]

செய்திகள்

கனிமொழி சொத்து மதிப்பு எவ்வளவு?

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் சொத்து விவரங்களை தெரிவித்து உள்ளார். தனக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள்  வைத்து இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம், இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அந்த நகைகளின் மதிப்பு ரூ,.55 லட்சத்து 37 ஆயிரத்து  555 ஆகும்.