• May 9, 2024

Month: March 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால்  ரூ. 1 லட்சத்து 34 ஆயிரம்

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தெற்கு குருவிகுளம் பகுதியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்தவர்களிடம்  ரூ.73,700 இருந்தது விசாரணையில் அவர்கள் பொரிகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினர். ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி […]

செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1 ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வாடிக்கையாளர் சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, 1௦ அல்லது 11 ரம்ஜான், 19 நாடாளுமன்ற மக்களவை தேர்தல், இத்துடன் (ஏப்ரல் 7,14,21,28) 4 ஞாயிற்றுக்கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகள் ஏப்ரல் 13,27 விடுமுறையாகும். ஆக மொத்தம் இந்த மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வருகிறது,.  

செய்திகள்

தேர்தல் எதிரொலி: டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் பொதுவிடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல் தேர்தலுக்கு முந்தையநாளான ஏப்ரல் 18 மற்றும் தேர்தலுக்கு பிந்தைய நாளான ஏப்ரல் 20 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது. இந்த உத்தரவை மீறி கள்ளசந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சினிமா

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்; கண்கள் தானம்

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து  ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத வில்லன் நடிகராக விளங்கியவர்  டேனியல் பாலாஜி. இவர் மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் ஆவார். சென்னையில் வசித்து வந்த டேனியல்  பாலாஜிக்கு   திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை  பலனின்றி டேனியல் பாலாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 48. நடிகர் டேனியல் பாலாஜியின் கண்களை தானமாக […]

செய்திகள்

முதல்-அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு

சேலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட  முத;ல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் பிரசார வியூகம் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

தமிழகத்தில்  ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, இன்று பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்த தடா பெரியசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு […]

ஆன்மிகம்

நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் நரசிம்மர்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் இருக்கிறது யாதகிரிகுட்டா. இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயம் மற்ற நரசிம்மர் ஆலயங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது. அதாவது பொதுவாக நரசிம்மர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நரசிம்மர் யோக நரசிம்மர் ஆகவோ,உக்கிர நரசிம்மர் ஆகவோ,லட்சுமி நரசிம்மராகவோ எப்படி இருந்தாலும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார். யோக நரசிம்மராக இருக்கும் போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையிலும் மற்ற நரசிம்மராக இருக்கையில் ஒரு காலை மடக்கி மற்றொரு […]

தூத்துக்குடி

 சலூன் கடைக்காரர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகரை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 42). சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (38). இவரது மனைவிக்கும் ஆண்டியப்பனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில்  கடந்த 2018 ஆம் ஆண்டு மகேஷ் தற்கொலை செய்து கொண்டாராம். இதனால் அவரது அண்ணன் குமாரசாமி (46) என்பவர் ஆண்டியப்பன் மீது ஆத்திரம் அடைந்தார். தம்பியின் மரணத்துக்கு காரணமான அவரை கொலை செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் திட்டம் […]

ஆன்மிகம்

சுதர்சன சக்கரத்தின் மகிமைகள்:

சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம். ‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது. சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும்போது  கிருஷ்ணரும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, […]

கோவில்பட்டி

புனித வெள்ளி: கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை பவனி 

2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள் . பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரண தீர்ப்பிடப்பட்டு பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்துச் செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பப்படுத்தினார்கள். அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு […]