• May 20, 2024

Month: February 2024

கோவில்பட்டி

மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி யோகா : ‘பேப்பர் கப்’ மீது அமர்ந்து மாணவ,

பாலித்தீன் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகள் , பாதிப்புகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், மஞ்சப்பை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் உள்ள எஸ்.ஆர்.எம்.எஸ். பள்ளியில் “ பாலித்தீன் பையை ஒழிப்போம் மஞ்சப்பையை காப்போம்” என்ற  தலைப்பில் விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராஜ்குமார் பள்ளி மேலாண்மை இயக்குனர் திருக்குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் காலி இடத்தில் குவிந்து கிடந்த மருந்து பாட்டில்கள் 

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் இருந்த ஹவுசிங் போர்டு வீடுகள் சேதமடைந்த காரணத்தினால் அந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டு தற்போது அந்த இடம் காலியிடமாக உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் பயன்படுத்தக் கூடிய அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் மருந்து பாட்டில்கள் குவிந்து கிடப்பது மட்டுமின்றி, காலியிடத்தின் பாதை முழுவதும் அந்த மருத்து பாட்டில்கள் வீசி செல்லப்பட்டுள்ளன.  அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் என்பது கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்பு சத்தினை […]

கோவில்பட்டி

76 வது பிறந்தநாள்: கோவில்பட்டியில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகேயுள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாநில மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, […]

செய்திகள்

திமுக வுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும்; தேர்தல் ஆணையத்திடம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கலந்து கொண்டனர்.  பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெயக்குமார் கூறியதாவது :- இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் பங்கேற்று எழுத்துப்பூர்வமான கடிதத்தை கொடுத்து உள்ளோம் என்றார். தேர்தல், நியாயமாகவும் ஜனநாயக முறையிலும் […]

கோவில்பட்டி

ஊரக திறனாய்வு தேர்வு: கோவில்பட்டி மாணவ, மாணவிகள் 4 பேர் வெற்றி

ஊரக திறனாய்வு த தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 9ம் வகுப்பு மாணவி எஸ்.கே.நிலா, மாணவர்கள் அருண்குமார், சரண், கிருத்திக் ஆகியோர் வெற்றி பெற்று பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கலவி உதவித்தொகை வழங்கப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி கொடுத்த ஆசிரியர்களையும், பள்ளியில் நடந்த விழாவின் ப பொது பள்ளி தலைவர் பழனிசெல்வம், செயலாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நூலாசிரியருக்கு ரோட்டரி பசுமை விருது

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரும்,கோவில்பட்டி பசுமை இயக்கத்தின் தலைவருமான  ஜெகஜோதி எழுதிய இயற்கை என்ற  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ,30ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. இயற்கை நூலாசிரியர் ஜெகஜோதிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது. கோவில்பட்டியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துசெல்வன், சாலை பாதுகாப்பு […]

செய்திகள்

47-ம் ஆண்டு நினைவு நாள்: ஈ.வி.கே.சம்பத் உருவப்படத்துக்கு மரியாதை

ஈ.வி.கே.சம்பத் 47-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். துணைத் தலைவர்கள் நாசே ஜெ.ராமசந்திரன், சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயத்துல்லா, விஜயன் மற்றும் சுமதி அன்பரசு, கவுன்சிலர் அமிர்தவர்ஷினி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கடும் பனிப்பொழிவு

கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனிபொழிவு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் கடும் பனிப்பொழிவு இருந்தது. கோவில்பட்டி மட்டுமின்றி சுற்றப்புற கிராமங்களிலும் இந்த நிலை நீடித்தது, காலை 7.30 மணி வரை  பனிபொழிவு இருந்தது. இதனால் சாலையில் வந்த வாகனங்கள் தெரியவில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர்,

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்; பிரதமர் மோடி 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்அமைக்கும் பணிகளை வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதேபோல் ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவேகட்டப்பட்ட புதிய ரெயில்வே தூக்கு மேம்பாலத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குழுவினர் பிரதமர் வரும் ஹெலிபேட் தளங்களை  சோதனை நடத்த உள்ளனர். கடலோர காவல்படை, மத்திய […]

கோவில்பட்டி

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி 

கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை வேளாண்மை நண்பர்களுக்கான பயிற்சி, கயத்தாறு வட்டார மகளிர் சுய உதவிக் குழுவினர்  30 பேருக்கு நடைப்பெற்றது. இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் தேரடி மணி தொடக்கி வைத்து உரையாற்றி சிறப்பித்தார்.  பனை மற்றும் வாழை ஆராய்ச்சி நிலைய தனி அதிகாரி முனைவர் வர்ணப்பிரியா வாழ்த்துரை வழங்கினார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் காளிராஜன்  […]