• May 20, 2024

Month: February 2024

கோவில்பட்டி

கிறிஸ்தவர்கள் தவக்கால திருயாத்திரை நடைபயணம்

கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் 14-2-24 அன்று  சாம்பல் புதன் எனும் நிகழ்வுகளுடன் அனைத்து தேவாலயங்களிலும் தவக்காலம் அனுஷ்டிக்கப்பட்டது. இதே தவக்காலம் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்திலும் தவக்காலம் தொடங்கி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைபாதைகள் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று தவக்கால திருயாத்திரை நடைபயணமாக இறைமக்கள் புனித சூசையப்பர் திருத்தலத்திலிருந்து மாலை 5 மணிக்கு புதுரோடு,எட்டையபுரம் ரோடு,கதிரேசன் கோவில் ரோடு வழியாக ஜெபங்கள் செய்தவாறு வீரவாஞ்சிநகர் பரலோக அன்னை தேவாலயம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் பொது சுகாதார ஆய்வகம் கட்டும்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில்  புதிதாக மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, பொதுப்பணித் துறை நிா்வாகப் பொறியாளா் செல்வி, மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (பொ) பொன்ரவி, மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி சுதா ஆகியோா் பணிகளை தொடங்கி வைத்தனா்.  நிகழ்ச்சியில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.13 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை  பூவனநாதசுவாமி கோவிலில் உள்ள தெப்பக்குளம் அம்ரித் -2.0 திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் நகராட்சி மூலமாக சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி,, நகராட்சி ஆணையர் கமலா,, நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடேஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா,, சண்முகராஜா, ரவீந்திரன், நிருத்தியலட்சுமி, கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, […]

கோவில்பட்டி

புனித ஓம் குளோபல் பள்ளியில் அறிவியல் விழா

கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் புனித ஓம் குளோபல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் பிக் பேங் – மெகா அறிவியல் விழா நடந்தது.  பள்ளி தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார் . பள்ளி செயலாளர் உஷாராணி, இயக்குநர் சிவராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில், திரவ நைட்ரஜன் ராக்கெட், வாட்டர்மெலன் ப்லேஸ்ட், பெர்னோலி துப்பாக்கி, மைய விலக்கு பலகை, எலிவேன்ட் டூத்பேஸ்ட், திரவ நைட்ரஜன் ஸ்ப்லேஷ் மற்றும் ஏர் கனான் லான்ச்சர் போன்ற 50-க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகள் […]

தூத்துக்குடி

கோவில்பட்டியில் ‘கடலைமிட்டாய் குறுங்குழுமம்’ அமைக்கப்படும்- தூத்துக்குடி நிகழ்ச்சியில் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு 

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசுகையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மழை, வெள்ள நிவாரண பணிகள், நிதி உதவிகள்,  அம்மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்தும் முதல்வர் […]

கோவில்பட்டி

புதியம்புத்தூர் அருகே மின்சார கார் உற்பத்தி ஆலை; கட்டுமானப்பணிகளை மு. க. ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் கிராமம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் 408 ஏக்கரில் ரூ.16 ஆயிரம் கோடி செலவில், வியட்நாம் நாட்டு நிறுவனத்தின் வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மின்சார கார் உற்பத்தி ஆலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா […]

செய்திகள்

திமுக கூட்டணியில் 2 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு

 நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் 2 கட்சிகளுக்கு இன்று தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்திட்டனர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய […]

கோவில்பட்டி

மாசி மாத பவுர்ணமி அன்னாபிஷேக விழா 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை  பூவனநாதசுவாமி திருக்கோவில்,மாசி மாத பவுர்ணமி அன்னாபிஷேகம் விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி தீபாராதனை,அபிஷேகம், அலங்காரம்,அன்னாபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது, இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்

கோவில்பட்டி

கோவில்பட்டி புதிய தாசில்தார் சரவணப்பெருமாள் பதவி ஏற்றார்

கோவில்பட்டி தாசில்தாராக இருந்த லெனின் தூத்துக்குடி சிப்காட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு புதிய தாசில்தாராக சரவணப்பெருமாள் நியமிக்கப்பட்டார். புதிய தாசில்தார் சரவணப்பெருமாள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தார் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்திகள்

பா ஜனதாவில் சேர்ந்தது ஏன்? விஜயதாரணி விளக்கம்

 குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம் எல் ஏ விஜயதாரணி. காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.  தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தியான விஜயதாரணி 1987 இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது சட்டசபை காங்கிரஸ் கட்சி கொறடாவாக உள்ளார்.  இந்நிலையில் தேசிய அரசியலில் ஈடுபட்ட விருப்பம் கொண்ட விஜயதாரணி, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.   இதனால் விஜய […]