• May 20, 2024

Month: February 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே 40 இலங்கை தமிழர் குடியிருப்புகள் திறப்பு

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் குலத்துள்வாய்பட்டி இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. குடியிருப்புகளை கனிமொழி எம்.பி.குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மேயர் ஜெகன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

இறைவனின் கணக்கு புத்தகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி பக்கம்

எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும். சித்திரகுப்தன் கணக்கு, நீதித் தீர்ப்பு நாளில் படிக்கப்படும் கணக்கு என்பது போல வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன. மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் […]

ஆன்மிகம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி; மக்கள் கருத்து கேட்பை தூத்துக்குடியில் தொடங்கிய

இந்த ஆண்டு  நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிதலைமையிலானா குழுவினர் இன்று தங்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர். இதன் முதல் கட்டமாக மக்கள் கருத்து கேட்பை தூத்துக்குடியில் இன்று தொடங்கினார். தூத்துக்குடி வடக்கு – தெற்கு, […]

செய்திகள்

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் இன்று முதல் சுற்றுப்பயணம்;பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார்கள் 

தேர்தல் அறிக்கை தொடர்பாக அதிமுகவின் 2வது ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தில்  நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன்,  ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து நாளை முதல் கருத்துக் கேட்க உள்ளோம்.  பயண திட்டத்தின் படி நாளை முதல் தொடங்குகிறது.( இன்று) சென்னை,வேலூர் மண்டலம், நாளை  ( 6ம் தேதி) […]

செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உடன் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ம.தி.மு.க.மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி களுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீடு குறித்து திமுக ஆலோசனை நடத்தியது.  இதில் திமுக சார்பில் டி.ஆர் பாலு, கே.என் நேரு, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தை சுமுகமாக […]

செய்திகள்

நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சி வெற்றி பெற என். ஆர். தனபாலன்

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் திரையுலகில் உச்சத்தை தொட்டது போல் தமிழக அரசியல் களத்திலும் உச்சத்தை தொட வேண்டும். நாடு முழுவதும் அரசியல் களம் சீரழிந்து வருவதைக்கண்டு மனம் வெதும்பிய நடிகர் விஜய், அதைத்துடைத்தெறியும் முயற்சியில் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.  நாடு முழுவதும் போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி காண வேண்டும்.  கையூட்டு பெறும் […]

கோவில்பட்டி

ரோபாட்டிக்  கண்காட்சி:  சிறந்த படைப்புகள் செய்த மாணவர்களுக்கு பரிசு 

கோவில்பட்டி பிருந்தாவன் பள்ளியில்  மாணவ, மாணவியருக்கான ரோபாட்டிக்  கண்காட்சி நடைபெற்றது. பள்ளி செயலாளர் அர்ஜீன் தலைமை தாங்கினார். எட்சோ லேப்ஸ் பயிற்சியாளர் பாலவிக்னேஷ் வரவேற்புரை வழங்கினார். ப்ளுஆன் டெக் மென்பொறி  நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரோஜர் ஆப்ரின் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆபிரகாம் சாமுவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியில் சிறந்த படைப்புகள் செய்திருந்த  மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். கல்வி பயணம் நிறுவனர் செந்தில் குமார்  வாழ்த்துரை வழங்கினார்  […]

செய்திகள்

அ.தி.மு.க. வின் எதிரி பா.ஜ.க. தான் ‘-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் 

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளையொட்டி சென்னையில் அவரது நினைவிடம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்க்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவியும், மலர் வளையும் வைத்தும்  மரியாதை செலுத்தினார். தொடர்ந்து  தலைமைக்கழக நிர்வாகிகள்,முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,திரளான கழக நிர்வாகிகள் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து   அ. தி. மு. க.அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். […]

கோவில்பட்டி

புனித ஜான் போஸ்கோ திருநாள் விழா

 கோவில்பட்டி கடலையூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின்  பாதுகாவலராம் புனித ஜான் போஸ்கோவின் திருநாள் விழாவும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா என இரு பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழா  பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி வசந்தா  தலைமையில், குத்துவிளக்கின் முதல் திரியை  அருட்தந்தை பால்சாமி அடிகளாரும், 10ம்,11ம்,12ம் வகுப்பு மாணவிகள் கபிலவர்ஷினி, ரேவதி, அனுதர்ஷினி மற்றும் எல்.கே.ஜி .மாணவன் ஆண்டனி ஆகியோரும் இணைந்து குத்து […]

கோவில்பட்டி

கடம்பூர் ராஜுவிடம் கம்மநாயுடு மகாஜன சங்கத்தினர் கோரிக்கை மனு 

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூவை  அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். தமிழ்நாடு அரசாணை எண்.2 நாள் 7.1.2021 ன் படி தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினா்  சான்று தடையில்லாமல் வழங்கிட தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல பொருளாளா் பி.கோபாலகிருஷ்ணன் , […]