• May 20, 2024

சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு கருத்தரங்கம்

 சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( சாலை பாதுகாப்பு மாதாந்திர விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.  கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் .நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் விளக்கப்படங்களுடன் தெளிவாகவும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் முனைவர் லாவண்யா வரவேற்று பேசினார்.அதனை தொடர்ந்து  தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் மன்ற தலைவர்  சுப்பிரமணியன் தொடக்க உரை நிகழ்த்தினார்.

இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புராஜ் தலைமை உரையில் சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். மேலும் இக்கருத்தரங்கில் கோவில்பட்டி போக்குவரத்து ஆய்வாளர்  சுரேஷ் விஸ்வநாதன், போக்குவரத்து தலைமை காவலர்கள் ஜெயலட்சுமி, காளிராஜ சேகர் ஆகியோருடன் போக்குவரத்து முதல்நிலை காவலர் ராஜராம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 முறையான பதிவுபெற்ற இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது கண்டிப்பான முறையில் தலைகவசம் அணிந்தும் மற்றும் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இயக்க வேண்டும் எனவும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மின் விளக்கின்றி வாகனங்களை இயக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலாளர்  விஜயன் வாழ்த்துரை வழங்க, நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்  மு. கீதாராணி நன்றியுரைவுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசியர்கள் மற்றும்  450 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்னடைந்தனர் இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ஹேமலதா செய்திருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *