• May 20, 2024

Month: November 2023

செய்திகள்

தமிழக மக்களின் ஆதரவு அலை எங்கள் பக்கம் உள்ளது; டி.ஜெயக்குமார் சொல்கிறார் 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது, இதில் முன்னாள் அமைச்சர்கள், கழக அமைப்பு செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்,  இந்த கூட்டத்தை தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :- […]

கோவில்பட்டி

ஜி.வி.மார்கண்டேயன் ஆய்வு: பழுதடைந்த ஆற்றுப்பாலத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் – மிளகுநத்தம் ஆற்றுப்பாலம் பழுதாகி உள்ளது என்று கிராம மக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயனை இன்று காலை 8 மணிக்கு நேரில்  சந்தித்து பாலத்தை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இதை கேட்டதும் உடனடியாக ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ. காலை 11-மணியளவில்  பாலத்தை நேரில் சென்று கிராம மக்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழை தண்ணீர் ஆற்றுப்பாலத்தின் மேல் ஓடியதை கண்டார். இதை தொடர்ந்து பாலத்தை […]

கோவில்பட்டி

3 பவுன் நகைக்காக பெண் கொலை: போலீஸ் விசாரணையில் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பூந்தோட்டம் காலனி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது65). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்துவிட்டதால் முத்துலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு  முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முத்துலட்சுமி செல்லவில்லை.  அதே சமயம் அன்றைய தினம் இரவு முத்துலட்சுமி மர்மமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கோவில்பட்டி கிழக்கு […]

கோவில்பட்டி

சிகரெட் லைட்டர் உற்பத்திக்கு தடைவிதிக்க வேண்டும்; மத்திய மந்திரியிடம் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பரமசிவம், துணைத் தலைவா் கோபால்சாமி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் லட்சுமணன், ஆதித்யா மேட்ச் சேம்பா் தலைவா் விஜய்ஆனந்த், தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத்தைச் சோ்ந்த நூா்முகமது நாகராஜன் ஆகியோர் மதுரையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அவர்களுடன், பா.ஜ..க மாநிலப் பொதுச்செயலா் பேராசிரியா் ராமசீனிவாசன் உடன் சென்று இருந்தார். இந்த சந்திப்பின்போது மத்திய நிதி மந்திரி  நிாமலா சீதாராமனிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது.=அந்த […]

கோவில்பட்டி

கம்ம இன மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினர் சான்று வழங்க வேண்டும்; கலெக்டரை  சந்தித்து

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக மண்டல செயல் தலைவா் ஆர்..செல்வராஜ் தலைமையில் பிரதிநிதிகள் குழுவினர் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் தீர்க்கும் முகாமில் பங்கேற்றனர். தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம், ,கோவில்பட்டி மண்டல செயற்குழு கூட்டம் தலைவர் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசாணை எண் 2 மிகவும் பிற்பட்ட மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை சார்பில் 7.1 21 ன் படி தெலுங்கு மொழி […]

செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை பற்றி தே.மு.தி.க.அறிக்கை

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் விஜயகாந்த் பற்றி தே.மு.தி.க. அறிக்கை வெளியிட்டுள்ளது. ,கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் .தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை […]

ஆன்மிகம்

2 நிமிடம் மட்டுமே மூடப்படும் கிருஷ்ணர் கோவில்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவார்பு நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில், இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோவில் ஆகும். கோவில் திறப்பு நேரம் நள்ளிரவு 12.00மணி முதல் நள்ளிரவு 11.58மணி வரை. ஒவ்வொரு நாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7 கோவில் மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். அற்புதம்! 1500ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்பூவில்  அமைந்துள்ளது. இங்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டத்தில், நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் நவம்பர்  மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது காரணமாக  நாளை  21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையங்கள் மற்றும்  மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம். கோவில்பட்டி:- கோவில்பட்டி, புதுக்கிராமம், […]

கோவில்பட்டி

தனியாக வசித்த பெண்வெட்டிக்கொலை

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனியை சேர்ந்தவர் குருசாமி. இவர் தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (65). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்து விட்டார். இதனால் முத்துலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலையில் முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவர், திருமண விழாவுக்கு செல்லவில்லை. அவரது செல்போனுக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டபோதிலும் பதில் இல்லை. இதையடுத்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு 26-ம் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2023-24-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ். ராஜன் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டிக்கான, தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்க்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வு வருகிற 26-ம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அழகர் பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடக்கிறது.  இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் கடந்த 1.9.1993 அன்றோ, அதற்கு பின்னரோ, 31.8.2010 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்திருக்க வேண்டும். கலந்து […]