• May 20, 2024

Month: October 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்கங்களை ஒன்றாக இணைத்து தேர்தல் நடத்த கருத்து கேட்பு கூட்டம்

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிர்வாக பிரச்சினைகளால் இரண்டு  பிரிவுகளாக செயல்பட்டு கொண்டிருகிறது. இந்த் நிலையில்  கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தினை ஒன்றாக இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று  கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த  கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பார்கவுன்சில் சார்பாக இன்று 6.10.2023 ல் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க நூலக கட்டிடத்தில் வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பார்கவுன்சில் […]

கோவில்பட்டி

உலக விண்வெளி வார விழா: மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் அறிவியல் மற்றும் விண்வெளி கருத்துக்களை கொண்டு செல்வதற்கு நாடு முழுவதும் அக்.4 ம் தேதி முதல் அக்-10ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைகோள் ஸ்புட்னிக் ஏவப்பட்ட தினம் அக் – 4,விண்வெளி ஆய்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட தினம் அக் -10, இதனை முன்னிட்டு  விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் உலக விண்வெளி வார விழா கோவில்பட்டி நாடார் […]

செய்திகள்

கலைஞர் 100 வினாடி-வினா இணையவழி போட்டி: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்பு

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் வகையில்‌ தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்..பி., முயற்சியின் பேரில்  அண்ணா பிறந்தநாளில்(செப்டம்பர் 15) கலைஞர் 100 வினாடி-வினா போட்டிகள் தொடங்கப்பட்டது. போட்டிகள் இணைய வழியில் தொடங்கப்பட்டு இன்று வரை 50 ஆயிரத்துக்கும் திற்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,24,097க்கும்  மேற்பட்ட முயற்சிகளில் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். 3,32,365 பேர் www.kalaignar100.co.in இணைய தளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர். தி.மு.க. மகளிர் அணி சார்பில் திமுக துணைப் பொதுச் […]

கோவில்பட்டி

மருத்துவமனை முன்பு நிறுத்திய ஸ்கூட்டர் திருட்டு; சி.சி.டி.வி.ஆதாரம் சிக்கியது

கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் மனைவி அகிலா. இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர்  கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக வந்த அவர், தனது  ஸ்கூட்டரை .மருத்துவமனைக்கு முன்புறம் சாலையில் நிறுத்திவிட்டு , சாவியை எடுக்காமல் உள்ளே சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே […]

செய்திகள்

தூத்துக்குடி ஆட்சியருக்கு விருது; முதல்-அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023 – ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருதினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்-க்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் திறப்பு

கோவில்பட்டியில் புதுரோடு விலக்கு சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் போக்குவரத்து காவல்துறை சார்பில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸ்காரர் அமர்ந்து கொள்வதற்கான கூண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. புதுபிக்கப்பட்ட  எட்டயபுரம் சாலை. போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கி  சிக்னலை திறந்து வைத்து பார்வையிட்டார். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு துண்டு […]

கோவில்பட்டி

சமுதாய வளைகாப்பு விழா; 100 கர்ப்பிணிகள் பங்கேற்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விளாத்திகுளத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 100- கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். சமுதாய வளைகாப்பு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜீன்னிசா, மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற […]

தூத்துக்குடி

வீடு புகுந்து மாமியார், மருமகளை மிரட்டி 62 பவுன் நகை கொள்ளை; 2

தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் அற்புதராஜ் என்ற குட்டி(வயது 65). இவர் ஸ்பிக் நகர் பஜாரில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. மூத்த மகன் தங்கதுரை (38) சென்னையிலும், இளைய மகன் ஜான் செல்வசீனி (35) தஞ்சாவூரிலும் வசித்து வருகின்றனர். சென்னையில் உள்ள தங்கதுரை குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர், தனது மனைவி அஸ்வினி (35) மற்றும் 5 […]

கோவில்பட்டி

எட்டையபுரம் பேரூராட்சி 5 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் பேவர் பிளாக் சாலை

எட்டையபுரம் பேரூராட்சி 2,6,11,12,13-வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில்  கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. இந்த் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் 54 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை; ஆரம்பகட்ட பணிகள் தீவிரம்

கோவில்பட்டி திட்டங்குளம் பகுதியில் ஏற்கனவே தமிழக அரசின் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில்  கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டியில் சுமார் 54 ஏக்கரில் ரூ.25 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது லிங்கம்பட்டியில் சிட்கோ சார்பில் புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தொழிற்பேட்டை நுழைவு […]