நாகர்கோவில் – சென்னை தாம்பரம் இடையே அந்த்யோதயா விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு அந்த்யோதயா விரைவு ரெயில் புறப்பட்டு வந்தது.கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தபோது திடீரென என்ஜின் பழுது காரணமாக அந்த்யோதயா விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ரெயில்வே மீட்பு குழுவினர் மற்றும் பராமரிப்பு குழுவினர் விரைந்து வந்தனர்.ஒரு சில நிமிடங்களில் புறப்படவேண்டிய ரெயில் அதிக நேரம் நின்றதால் பயணிகள் என்னமோ ஏதோ வென்று இறங்கி பார்த்தனர்.அப்போது […]
பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத தொடக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன […]
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு குடோன் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால் அருகில் உள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஏற்கனவே 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டம், அரசு அதிகாரி உத்தரவை மீறியது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது […]
2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்து, முதல் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில், 2024 – […]
அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.அரசை கண்டித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மேற்கண்டவாறு எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர், கடலுார் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமம் ஆகும். சென்னை நந்தனம் அரசு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பிலும் அவருக்கு வீடு உள்ளது. சென்னையில் இருக்கும் போது அங்கு அவர் தங்குவார். கடந்த சில நாட்களாக சொந்த ஊரில் கே.எஸ்.அழகிரி, குடும்பத்துடன் தங்கி இருந்தார். சிதம்பரத்தில் அழகிரி குடும்பத்தினர் நடத்தி வரும் கல்லுாரியின் மைதானத்தில், நேற்று காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவருக்கு திடீரென […]
நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மாடசாமி ,மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாராஜன், கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி,ஒன்றிய செயலாளர் லெனின், மாரிமுத் து உட்பட பலர் […]
கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன. 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் . இதனை கண்டித்து அப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த […]
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், […]