பட்டாசு குடோனில் வெடிவிபத்து; 8 பேர் பலி- உருக்கமான காணொளி
![பட்டாசு குடோனில் வெடிவிபத்து; 8 பேர் பலி- உருக்கமான காணொளி](https://tn96news.com/wp-content/uploads/2023/07/500x300_1416757-gfd.webp)
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு குடோன் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால் அருகில் உள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஏற்கனவே 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்பே பட்டாசு வெடிவிபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்குள்ளான பட்டாசு குடோன் முறையான அனுமதி பெற்றுதான் செயல்பட்டு வந்ததாக கலெக்டர் தெரிவித்தார்.
வெடி விபத்து நடந்த இடத்தில் நடந்த மீட்பு பணிகள் பற்றிய உருக்கமான காணொளி வெளியாகி உள்ள்ளது. அதை இங்கு காணலாம்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)