அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கோவில்பட்டியில் பா. ம. க. வினர் சாலை மறியல்

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மாடசாமி ,மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாராஜன், கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி,ஒன்றிய செயலாளர் லெனின், மாரிமுத் து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியினர், டாக்டர் அன்புமணி ராமதாசை விடுதலை செய்யும் வரை சாலை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி உறுதியாக இருந்தனர். இதனால் போலீசாருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்
ளு ஏற்பட்டது பின்பு
போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இதனால் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
