Month: July 2023

கோவில்பட்டி

ஓய்வுபெற்ற துணை கலெக்டர் வீட்டு பூட்டை உடைத்து நகை திருட்டு

கோவில்பட்டியை சாலைப்புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 68). ஓய்வு பெற்ற துணை கலெக்டர். இவர் கடந்த மாதம் 27-ந்் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் குப்பனாபுரம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிற்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்து விட்டு . பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்., உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7½ பவுன் தங்க […]

கோவில்பட்டி

பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம்

மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பா.ஜனதா கட்சியினர் கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முன்பிருந்து ஊர்வலமாக சென்று ஒவ்வொரு கடைகள் மற்றும் வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் சீனிவாசன், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன், மாவட்ட துணை தலைவர் பால முருகேசன், மேற்கு ஒன்றிய […]

செய்திகள்

அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் : ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட குழந்தையை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்த்தனர்.பின்னர் குழந்தையின் பெற்றோரை சந்தித்து மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தனர். அப்போது குழந்தையின் தாய் விவரமாக எடுத்து கூறினார்.இதையடுத்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :- மருத்துவதுறை அம்மா காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. ஆனால் திமுக ஆட்சி யில் […]

ஆன்மிகம்

அர்த்தமுள்ள, அவசியமான அறிவுரைகள்

*ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே சேமிக்க வேண்டும் . *வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், கணவன் / மனைவியை நோய்வாய்ப் படும்போதும், துரதிர்ஷ்டமான காலத்திலும் அறியலாம். *ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். *அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். *நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் […]

தூத்துக்குடி

கடல் பகுதிகளில் பலத்த காற்று : தூத்துக்குடி மீனவர்கள்  மீன்பிடிக்க செல்லவில்லை. 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 3-ந்தேதி முதல் வருகிற 6-ந்தேதி வரை தென்தமிழகம், மன்னார் வளைகுடா, குமரி கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும் எனவும், சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் அளவில் சூறைக்காற்று வீசலாம் எனவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் […]

கோவில்பட்டி

தீவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு தீக்குச்சி ஆலை சார்பில் இழப்பீடு தொகை வழங்கல்

கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தில் உள்ள தீக்குச்சி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியம்மாள் (வயது 63)என்பவர்  உடல் கருகி பரிதாபமாக இறந்து போனார். இன்னொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பலியான மாரியம்மாள்  குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகத்தினர் ரூ.4½ லட்சம் இழப்பீடு தருவதாக கூறி, அன்றைய தினம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். மீதித்தொகையான ரூ.1½ லட்சத்தை வழங்க கோரி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் குரு பூர்ணிமா; ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை

ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வரும் ழுழுநிலவு (பவுர்ணமி ) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை  (ஆசிரியரை) போற்றும் முகமாக  குருவழிபாடு என்னும் குரு பூஜை  செய்வார்கள். இதனை துறவிகள், வியாச பூஜை  என்றும் வியாச பூர்ணிமா  என்றும் அழைப்பர். மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி. பகவத் கீதை அருளிய கிருஷ்ணர் , வேதங்களை தொகுத்த  வியாசர், உபநிடதங்களுக்கு கு விளக்கம் எழுதிய  ஆதி சங்கரர், மத்வர் மற்றும் […]

செய்திகள்

நடிப்பதை சில காலம் நிறுத்தி விட்டு அரசியலில் ஈடுபட விஜய் திட்டம்?

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. சென்னை அருகே பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்கள். சமீபத்தில் […]

கோவில்பட்டி

எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.38-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் புதிதாக கட்டப்பட உள்ளது.. மேலும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22.600-லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணிகளை கனிமொழி எம்.பி.அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் அமைச்சர் .பெ.கீதாஜீவன் ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், […]

செய்திகள்

அனந்தபுரி, திருநெல்வேலி- நாகா்கோவில் விரைவு ரெயில்களின் நேரம் 7-ம் தேதி முதல் மாறுகிறது

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- : சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரெயிலின் (17823) பயண நேரம், வருகிற  7-ஆம் தேதி முதல் பகுதியளவில் மாற்றப்படுகிறது.  சென்னை- கோவில்பட்டி வரை வழக்கமான நேரத்தில் இயங்கும். திருநெல்வேலி முதல் கொல்லம் வரையிலான பயண நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.  அதன் விவரம் (ரெயில் நிலையம் வாரியாக, வரும் நேரம் / புறப்படும் நேரம்) வருமாறு:- திருநெல்வேலி – காலை […]